பாஜகவினர் புகார் எதிரொலி: நாகலாந்து டிஜிபியை மாற்றி உள்துறை அமைச்சகம் நடவடிக்கை

கோஹிமா:

நாகலாந்து மாநிலத்தில் பாரதியஜனதா ஆதரவுடன் நாகா மக்கள் முன்னணி ஆட்சி நடைபெற்று வருகிறது. மாநில முதல்வராக நெப்யூ ரியோ பதவி வகித்து வருகிறார். இந்த நிலையில், பாரதியஜனதா கட்சியினரின் புகார் காரண மாக மாநில டிஜபி ருபின் சர்மா மாற்றப்பட்டுள்ளார். இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

நாகலாந்தில் கடந்த பிப்ரவரி மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இதில் அதிக இடங்களை கைப்பற்றிய நாகா மக்கள் முன்னணி கட்சி பாஜ ஆதரவுடன் ஆட்சி அமைத்தது. தேர்தலின்போதே மாநில டிஜிபியாக இருந்த ருபின் சர்மா பாரபட்சமின்றி நேர்மையாக நடந்ததால் அரசியல் கட்சிகளின் வெறுப்புக்கு ஆளானார்.

“எந்த அரசியல்வாதியையும் விருப்பு வெறுப்பின்றி அதிகாரத்தில் தலையிட அனுமதிக்கவில்லை. இது மத்திய மாநில அமைச்சர்களையும், அரசியல்வாதிகளையும்  நேரடியாக பாதிக்கிறது.” அதனால் தான் அவரை வெளியேற்ற விரும்புவதாக பாஜக தலைவர்கள் கூறி வந்தனர். அதன் எதிரொலி யாக அவரை மாற்ற உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுஉள்ளது.

நாகலாந்து மாநில முதல்வர் நெப்யூ ரியோ

நாகலாந்து கேடரை சர்ந்த போலீஸ் ஆபிசரான ருபின் சர்மா, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் டிஜிபியாக பொறுப் பேற்றார். மிகவும் கண்டிப்பான அதிகாரியான அவரை மாற்ற பாஜகவினர், மற்ற அதிகாரிகளை கொண்டு பிரச்சினை ஏற்படுத்தி வந்தனர். அவருக்கு எதிராக அவருடன் பணியாற்றும் இளைய அதிகாரிகள் மூலம் பலவேறு பிரச்சினை ளை உருவாக்கி வந்தனர். அத்துடன் அவருக்கு எதிராக கையெழுத்து இயக்கத்தை ஆரம்பித்து, அதுகுறித்துமத்திய மாநில அரசுகளுக்கும் புகார் மனு அனுப்பி இருந்தனர்.

பாரதியஜனதா கட்சியினரின் நெருக்குதல் காரணமாக நாகலாந்து மாநில தலைமைசெயலாளர் தேஜென் டாய் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு கடிதம் எழுதியிருந்தார். அதில், கடந்த பிப்ரவரி மாதம நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் போது டிஜிபியின் அனுபவமின்மை காரணமாக பல விரும்பத்தகாத நிகழ்வுகள் ஏற்பட்டதாகவும், இருந்தாலும் சட்டமன்ற தேர்தல்கள் சட்டம்ஒழுங்கு பிரச்சினையின்றி நடைபெற்றதாக  கூறியிருந்தார். மேலும், இதன் காரணமாக ருபின் சர்மாக நீக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி இருந்தார்.

அதையடுத்து, ருபின்சர்மாவை மாற்ற மத்திய உள்துறை அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது. மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் உத்தரவின்பேரில் ருபின் சர்மா மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக  ஏடிஜிபி  ரென்சாமோ பி கிக்கான் கூடுதலாக அந்த பொறுப்பேற்றுள்ளார்.

இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.