மக்களுக்கு சேவை செய்வதையே பாஜக பெருமையாக கருதுகிறது :  மோடி பேச்சு

க்களுக்கு சேவை செய்வதையே பாரதிய ஜனதா கட்சி பெருமையாகக் கருதுகிறது என்று பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், தெலுங்கானா, சத்தீஸ்கர் மற்றும் மிசோரம்  ஆகிய மாநில சட்டசபை தேர்தல் தேதிகளை தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது.  இந்த சட்டசபை தேர்தல் முடிவுகள் நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளுக்கு முன்னோட்டமாக இருக்கும்  எனக்கருதப்படுவதால் அரசியல் கட்சிகள் தேர்ல் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றன.

இந்த நிலையில் பாஜக தொண்டர்களுக்கு ஊக்கமளிக்கும் விதமாக அக்கட்சியின் பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் காணொலி வாயிலாக பிரதமர் மோடி கலந்துரையாடினார்.

அப்போது அவர் பேசியதாவது:

“எதிர்க்கட்சிகளின் கூட்டணி  என்பது கொள்கை அளவில் ஏற்பட்டது அல்ல. அவர்களின் இலக்கு என்னைப் பதவியில் இருந்து இறக்குவது மட்டும்தான்.

மேலும், எதிர்க்கட்சியினர் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள கூட்டணி அமைத்திருக்கிறார்கள்.  நாட்டின் நலனில் அவர்களுக்கு அக்கறை கிடையாது. பாரதிய ஜனதாக் கட்சி எந்த தனிப்பட்ட குடும்பத்தையும் சார்ந்தது அல்ல. கடுமையாகக் களப்பணியாற்றும் ஊழியர்களைப் பெற்றிருப்பதால் பாஜக தனித்துவம் மிக்க கட்சியாக   விளங்குகிறது.

தேர்தலில் வெற்றி பெறுவதை பாரதிய ஜனதா பெருமையாகக் கருதுவது கிடையாது. மக்களுக்கு சேவையாற்ற கிடைக்கும் வாய்ப்பையே மகத்தானதாகக் கருதுகிறது. அதற்காகவே அதிகாரத்துக்கு வர விரும்புகிறது” என்று மோடி பேசினார்.