பிரியங்கா காந்தியை வைத்து போலிச்செய்தியை உலாவ விடும் பிஜேபி

ங்கை ஆறு பிஜேபி ஆட்சிக்கு முன்பு, பின்பு என இரு படங்களை கொடுத்து அதில் பிரியங்கா காந்தி நீர் அருந்துவது போல ஒரு படத்தினை வைத்துள்ளார்கள்

அதாவது பிஜேபி ஆட்சிக்கு வருவதற்கு முன்பு அசுத்தமாக இருந்த இடத்தில் இன்று பிஜேபி வந்தபின்னர் கங்கையை சுத்தம் செய்துள்ளது  போலவும், அதில் பிரியங்கா காந்தி நீர் அருந்துவது போலவும் வைத்து உள்ளார்கள்.

ஆனால் இந்தப் புகைப்படத்தினை பெரிது படுத்திப்பார்த்தால் போட்டோஷாப்பில் அவர் கையை  சுற்றியுள்ள இடங்களை மட்டும் முழுமையாக நீக்காமல் பயன்படுத்தி உள்ளனர். அது மட்டுமல்லாமல் கங்கை கரையியை விட பிரியங்கா காந்தி நீர் அருந்தும் இடம் மிக உயரத்தில் உள்ளது.

இதுபோன்ற போலிச்செய்திகளை  இணையத்தில் உலாவவிட்டு ஓட்டு கேட்பது ஜனநாயக நாட்டில் நல்லதல்ல…