புதுச்சேரியில் பரபரப்பு: முதல்வருக்கு கருப்புகொடி காட்டிய பாஜகவினர் கைது

புதுச்சேரி:

பாஜக நிமயன எம்எல்ஏக்களை சட்டமன்றத்திற்குள் அனுமதிக்காத  முதல்வர் நாராயணசாமி மற்றும் சபாநாயகர் வைத்தியலிங்கத்திற்கு எதிராகவும், சட்டப்பேரவையை முன்கூட்டியே முடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து  கருப்புகொடி காட்டியும், அவர்களின் வீட்டை முற்றுகை யிடப்போவதாகவும் புதுச்சேரி பாரதியஜனதா கட்சியினர் அறிவித்திருந்தனர்.

இந்த நிலையில், முதல்வர் நாராயணசாமிக்கு கறுப்புக்கொடி காட்டி, அவரது வீட்டை முற்றுகையிட முயன்றனர். அப்போது பாதுகாப்புக்காக நின்றிருந்த காவல்துறையினருக்கும், பாஜகவினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

அதைத்தொடர்ந்து, போராட்டம் நடத்திய பாஜகவினரை  தடுத்து நிறுத்தி போலீசார் கைது செய்தனர்.

கார்ட்டூன் கேலரி