அரச மரம் (போதி மரம்) எனும் ஞான மரத்தின் அற்புத பலன்கள்! (Ficus Religiosa).

அரசு என்பது பெரிதாக வளரக்கூடிய ஒரு மரமாகும். அரசு, ஆல், அத்தி போன்றவை இதனோடு தொடர்புடைய மரங்கள் ஆகும். இந்த மரம் இருக்குமிடத்தில் அதிகமான ஆக்ஸிஜனை இருக்கும். 30 மீட்டர் உயரம் வரை வளரக்கூடிய இத் தாவரத்தின் அடி மரத்தின் விட்டம் 3 மீட்டர் வரை வளரக்கூடியது. இது இந்தியா, இலங்கை, தென்மேற்குச் சீனா, இந்தோசீனா மற்றும் கிழக்கு வியட்நாம் போன்ற பகுதிகளைச் சார்ந்தது.இதன் இலை நீண்ட கூரிய முனையுடன் கூடிய இதய வடிவம் கொண்டது. இம்மரம் இந்து பௌத்த மதங்களில் முக்கிய இடம் பெற்றுள்ளது. புத்தர் ஞானம் பெற்றதாக குறிப்பிடப்படும் போதி மரம் இதுவேயாகும்

ஆன்மீகத்தில் அரச மரம் 

பிரம்மதேவனும், நடுப்பகுதியில் மஹாவிஷ்ணுவும், நுனிப்பகுதியில் பரமசிவனும் வாசம் செய்கிறார்கள். ஆகவேதான். மும்மூர்த்தி வடிவமான அரச மரத்தை பூஜைகள் செய்வதும், பிரதட்சணம் செய்வதும் வணங்குவதும், துன்பங்கள் ஏற்படுவதற்குக் காரணமான பாபங்களைப் போக்கி நல்ல அறிவையும் பெற்றுத்தரும் என்கிறது சாஸ்திரம்.
அரச மரத்தினை தொடர்ந்து சுற்றிவந்தால் குழந்தை பாக்கியம் பெறும், அரச மரத்தின் அடியில் இருந்து படித்தால் நினைவற்றால் அதிகம் கிடைக்கும. ஜோதிடத்தில் குருவுக்கு உகந்த மரம் எனவும், பலக்கோயில்களின் தள விருட்சமாகவும்  இருக்கிறது.

அரசமரம். (Ficus Religiosa).
அரசம் வேர் மேல் விரண மாற்றும் வித்து
வெருவவருஞ் சுக்கிலநோய் வீட்டுங்-குரல்வறளும்
தாய்மொழிக் குங்கொழுந்து தாது தரும் வெப்ப காற்றும்
வேகமுத்தோ ஷம்போக்கும் மெய்.

மருத்துவ குணங்கள்

சித்திரை, வைகாசி மாதங்களில் மதிய வேளையில் அரசமர நிழலில் இளைப்பாறினால், தோல் சம்பந்தமான நோய்கள் தீரும்’ என்கிறது, சித்த மருத்துவம்.  மேலும்  உடலில் உள்ள நாளமில்லா சுரப்பிகள் தூண்டப்படவும் உதவுகின்றது. எனவே இம்மரத்தில் அடியில் அமர்ந்து தியானம் செய்தால் ஆரோக்கியம் கிட்டும் என்பதும் நிரூபணமாகிறது

யாக சாலைகளில்  வளர்க்கும்போது, அரச மரக்குச்சிகளையே அதிகம் பயன்படுத்துவார்கள். அரசமர குச்சியினை எரிக்கும்போது  வரக்கூடிய புகை, மூச்சுத் திணறலையும் சளித்தொந்தரவு, சோர்வு, நரம்புத்தளர்ச்சி ஆகியவற்றையும் போக்கக்கூடியது.

மிக முக்கியமாக  ’அரச மரத்தின் பழத்தை உண்டால், விந்தணுக்களின் எண்ணிக்கை அதிகமாகும்’ என்கிறது, சித்த மருத்துவம். அரச மரத்தின் அடிப்பகுதியில் கீறினால் வடியும் பாலை, பித்த வெடிப்புகளில் தடவினால் குணமாகும். அரச மரத்தின் பட்டை, வேர், விதை ஆகியவற்றைப் பாலில் கொதிக்க வைத்து, ஆறிய பிறகு, அதில் தேன் கலந்து 48 நாட்கள் அருந்தி வந்தால் தாது விருத்தியடையும். பெண்களுக்கு கருப்பைக் கோளாறுகள் நீங்கும். ஆனால் இதை முறையாக சித்த மருத்துவர்களிடம் ஆலோசித்து பின் பயன்படுத்தலாம்

பயன்கள்

அரச இலை துளிரை அரைத்துக்கட்டினால் புண்கள் ஆறும். அரச வேர்பட்டையை 3 கிராம் எடுத்து 300  மிலி நீருடன் கொதிக்க வைத்து 100 மில்லியாக சுண்டிப்பருகினால் வெட்டைச் சூடு, சொறி , திணவு , சிரங்கு போன்ற தோல் நோய்கள் நீங்கும்.

மரப்படை தூளை தேங்காய் எண்ணெயில் கலந்து தோலின் மேல் பூசி வந்தால் தினவு புண்கள் ஆறும்.
அரச விதைத்தூளை அரைத்து 5லிருந்து 10 கிராம் பாலில் அருந்தி வந்தால் ஆண் மலடு நீங்கி தாது விருத்தி உண்டாகும். மலச்சிக்கலும் போக்கும்.
அரசு கொழுந்து காய்ச்சிக்குடி நீராக பருகினால் கடுமையான சுரம் நீங்கும்
அரசம் பழத்தை உலர்த்தி பொடி செய்து 5 கிராம் வீதம் ஒரு மாதம் உண்டுவந்தால் சுவாச நோய்களான ஆஸ்துமா கட்டுப்படும்

பெண்களும், அரச விதை அல்லது கொழுந்தை உண்டு வந்தால் பெண் மலடு நீங்கும். உடல் வன்மை பெருகும்.
உடல் உஷ்ணத்தினைப்போக்கும்

விஷக்கடிகள் பூசி வந்தால் பாதுகாப்பு கவசமாக இருக்கும். இளஞ்சிவன்னாப அரச மர இலையை கஷாயமாக காய்ச்சி குடித்து வந்தால் மஞ்சள் காமலை நோய் நீங்கும்.

கல்லீரலை பாதுகாக்கிறது. எனவே குடிப்பழக்கம் உள்ளவர்கள் இதை பயன்படுத்தினால் கல்லீரல் பலப்படும். இரவு நேரத்தில் தண்ணீரில் உறவைத்த இலையை நீரைப்பருகி வந்தால் இருதயம் ஆரோக்கியம் பெரும்.

சர்க்கரை நோய் உள்ளவர்கள் அரச மர காயின் பொடியையும், கடுக்காய் பொடியையும் சமஅளவு கலந்து 5 கிராம் வீதம் காலை மாலை எடுத்துக்கொண்டால் சர்க்கரை நோய் கட்டுப்படும்.

அரச விதையை தேனுடன் கலந்து சாப்பிட்டால் இரத்தம் சுத்தியடையும்

இதுபற்றிய பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுளளன உங்களின் பார்வைக்கு சில
https://pdfs.semanticscholar.org/d047/95cfa4912e1878b6876c7bc5cf085986a4d7.pdf
https://www.researchgate.net/publication/326127150_Ficus_religiosa_A_wholesome_medicinal_tree

மருத்துவர் பாலாஜி கனகசபை , MBBS, PhD
அரசு மருத்துவர்
கல்லாவி
9942922002