நெல்லை:

சாத்தான்குளம் வியாபாரிகளான தந்தை ஜெயராஜ் பிரேத பரிசோதனைக்கு பிறகு, மாவட்ட நீதிபதியின் விசாரணை மற்றும் உறுதிமொழியை தொடர்ந்து  உறவினர்களிடம்  ஒப்படைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து இரவு 7 மணி அளவில் அவர்களின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

காவல்துறையினரின் காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கையால், சாத்தான்குளம் வியாபாரிகளான தந்தை ஜெயராஜ்,  அவரது மகன் பென்னிக்ஸ் மரணமடைந்த சம்பவத்தில் கொலை வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று உறவினர்கள், வணிகர் சங்கங்கள் வேண்டுகோள் வைத்திருந்தனர்.

மேலும் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் இருந்து உடல்களை வாங்கமாட்டோம் என்றும் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தனர். இந்நிலையில்  மாஜிஸ்திரேட் விசாரணையைத் தொடர்ந்து உடல் பெற்றுக்கொள்ளப் பட்டது.

சாத்தான்குளத்தில் ஊரடங்கு  நேரத்தை மீறி கடை திறந்ததற்காக விசாரணைக்கு அழைத்து செல்லப்பபட்டு கடுமையாக தாக்கப்பட்ட செல்போன் கடை உரிமையாளர் ஜெயராஜ் அவரின் மகன் பென்னிக்ஸ் ஆகியோர்  உயிரிழந்ததனர். அவர்கள் கோவில்பட்டி கிளை சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர்களில் முதலில் தந்தை ஜெயராஜூம்  மகன் பென்னிக்சும் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளனர். தென்மாவட்டத்தில் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அவர்களின் உடல்களை நெல்லை அரசு மருத்துவமனையை சேர்ந்த டாக்டர். செல்வமுருகன் தலைமையில் மருத்துவர்கள் பிரசன்னா, ஸ்ரீதர், சீதாலட்சுமி ஆகியோர் அடங்கிய மருத்துக்குழு இருவரின் உடலையும் பிரேத பரிசோதனை செய்தனர்.

 

அப்போது,  சாத்தான்குளத்திலிருந்து ஜெயராஜ் மனைவி செல்வராணி, மகள்கள் பெர்ஸி, பியூலா, அபிஷா ஆகியோர் மற்றும் உறவினர்கள் நெல்லை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டனர்

கோவில்பட்டி 1-வது நீதிமன்ற ஜூடிசியல் நீதிபதி பாரதிதாசன் காலை 11 மணி அளவில் பிரேத பரிசோதனை நடைபெறும் அறைக்கு வந்து பார்வையிட்டார். தொடர்ந்து, இருவரின் உடலும் பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது.

உறவினர்களிடத்திலும் நீதிபதி பாரதிதாசன் வாக்குமூலம் பதிவு செய்தார். நீதிபதியிடத்தில் உறவினர்கள், சாத்தான்குளத்தில் ஜெயராஜூம், பென்னிக்சும் அன்புடன் நடந்து கொள்வார்கள். இருவர் மீதும் இதற்கு முன்பு எந்த வழக்கும் இல்லை என்று தெரிவித்தனர்.  மேலும்,   ஜூன் 20- ந் தேதி தந்தையும் மகனும் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட போதிலிருந்து அவர்களின் ஆசனவாயில் ரத்தப் போக்கு இருந்து கொண்டே இருந்தது.

உயிரிழந்த ஜெயராஜின் மனைவி மற்றும் மகள் – உறவினர்கள்

காலை 7 மணியிலிருந்து மதியம் 12 மணிக்குள் அவர்களுக்கு 7 முறை லுங்கிகளை மாற்றப்பட்டது தொடர்ந்து ரத்தப் போக்கு இருந்து கொண்டே இருந்ததால், அவர்கள் அணிந்த லுங்கிகள் ஈரமாகிக் கொண்டே இருந்தன. கடுமையாக வலிப்பதாக அவர்கள் எங்களிடத்தில் கூறினர். சிறையிலிருந்து அவர்கள் நீதிபதியிடத்தில் அழைத்து செல்லப் பட்டனர். போலீஸாரின் கடுமையான அச்சுறுத்தல் காரணமாக நீதிபதியிடத்தில் அவர்கள் உண்மையை சொல்லத் தயங்கினர்.

போலீஸ் நிலையத்தில் அவர்கள் இருந்த போது தொடர்ச்சியாக மூன்று மணி நேரம் அவர்கள் வலியால் கத்தும் சத்தம் எங்களுக்கு கேட்டது. இரவு முழுவதும் அவர்கள் உதவி கேட்டனர். போலீஸ் நிலையத்திலிந்து 500 மீட்டர் சுற்றளவில் உள்ள வீடுகளில் உள்ளவர்களும் தந்தையும் மகனும் கத்துவதை கேட்டுள்ளனர்” என்று கூறியுள்ளனர்

உயிரிழந்த ஜெயராஜ் மகள் சொல்லும் போது, இந்த வழக்கை  உயர்நீதிமன்றம் கையில் எடுத்துள்ளது. வழக்கில் கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டுமென்றால் அது காவல்துறையை கையில் இல்லை.  உயிரிழந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பெண்ணின் உடலில் ஏற்பட்ட காயங்கள் அனைத்தும் வீடியோ பதிவு செய்யப்பட்டிருக்கிறது என்றும், அடித்துக் கொலை செய்யப்படுவதற்கான சாட்சியங்களாக இருக்கின்றது என்றும்மாஜிஸ்ட்ரேட் உறுதி செய்திருக்கிறார்.

குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க ஏதுவாக அனைத்து ஆதாரங்களும் இருப்பதால் நீதிமன்றம் மீது எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது எனவே நாங்கள் உடலை வாங்கிக்கொள்கின்றோம் என்று 3 மகள்களும், ஜெயராஜ் மனைவியும் தெரிவித்துள்ளார்கள்.

அதையடுத்து அவர்களின் உடல் ஆம்புலன்ஸ் மூலம் சாத்தான்குளம் எடுத்து வரப்பட்டது.  அங்கு பஜாரில் உள்ள காமராஜ்ர் சிலைக்கு கீழே வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் அவர்களின் விடுகளுக்கு எடுத்துச் செலப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்ட நிலையில், மாலை 6 மணிக்கு மேல் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு கல்லரைத் தோட்டத்தில் சுமார் 7 மணி அளவில் நல்லடக்கம் செய்யப்பட்டது.