கோவை ரஜினி மன்ற பொறுப்பாளராகிறார் தமிழக அமைச்சரின் அண்ணன்?

நியூஸ்பாண்ட்:

ஜினி பேசினாலும் செய்தி, பேசாவிட்டாலும் செய்திதான்.

தற்போது, ரஜினி மன்ற முதல் மாநாடு கோவையில் நடக்க இருப்பதாக வெளியாகி இருக்கும் தகவல்தான் ஹாட் ஆப்தி சிட்டி.

மாநாட்டுக்காக கோவையை ஏன் ரஜினி தேர்ந்தெடுத்தார் என்பதற்கு சில காரணங்கள் சொல்லப்படுகின்றன.

கொங்கு மண்டலத்தில் ரஜினிக்கு இருக்கும் பேராதரவு, “மணல் மனிதர்” ஆறுமுகசாமியின் ஆதரவு ஆகியவைதான் அவை. மேலும், தொண்டாமுத்தூர் எம்.எல்.ஏ.வும்., தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சருமான எஸ்.பி.வேலுமணியின் அண்ணன் அன்புவின் ஆதரவும் ஒரு காரணமாகச் சொல்லப்படுகிறது.

ரஜினி

இந்த அன்பு, தங்கமயில் ஜூவல்லரி அதிபர். சிறு வயதிலியே தீவிர ரஜினி ரசிகராக வலம் வந்தவர். இன்றளவும் தன்னை வெளிப்படுத்திக்கொள்ளாமல் ரஜினி மன்றங்களுக்கு உதவி செய்து வருபவர். குறிப்பாக தற்போது கோவை மாவட்ட ரஜினி மன்ற பொறுப்பாளரான வேணுகோபாலின் நெருங்கிய நண்பர்.

வேணுகோபால் உடல் நலக்குறைவு காரணாக அவதிப்பட்டு வருகிறார். ஆகவே அன்புவை மாவட்ட தலைவராக நியமிக்கலாம் என்று ரஜினியிடம் கூறியிருக்கிறார்.

வேலுமணி

இதற்கு ரஜினியும் ஓ.கே. சொல்லிவிட்டாராம். ஆகவே விரைவில் அன்பு.. அதாவது எஸ்.பி. வேலுமணியின் அண்ணன்.. கோவை மாவட்ட ரஜினி மன்ற தலைவராக பொறுப்பேற்பார் என்கிறார்கள்.

அன்பு

“தனது சகோதரர் வேலுமணி அ.தி.மு.க. அமைச்சராக இருந்தாலும், கட்சிக் கூட்டங்களில் தலைகாட்டாதவர் அன்பு. ரஜினி மன்றத்தினருடன் இன்றும் தொடர்பில் இருப்பவர். ஆகவே அவர் கோவை மாவட்ட தலைவராக்கப்பட்டால் சிறப்பாக செயல்படுவார்” என்கிறார்கள் கோவை மாவட்ட ரஜினி மன்றத்தினர்.

அன்பு தரப்பினரோ, இது குறித்து எதுவும் பதில் கூறாமல் மவுனப்புன்னகை புரிகிறார்கள்.

தமிழக அமைச்சர்கள், ரஜினியை கடுமையாக விமர்சித்து வரும் வேளையில் அமைச்சர் ஒருவரின் அண்ணன், மன்றத்தில் பொறுப்பேற்கிறார் என்றால்… ரஜினி பக்கா அரசியல்வாதிதான்!

கார்ட்டூன் கேலரி