சென்னை:

மிழக சட்டமன்றத்தில் 2019-20ம் ஆண்டுக்கான பட்ஜெட் கடந்த 8ந்தேதி தாக்கப்பட்ட நிலையில், இன்று முதல் 14ந்தேதி பட்ஜெட் மீதான விவாதங்கள் நடைபெற உள்ளது.

பட்ஜெட் தாக்கல் செய்ததை தொடர்ந்து சனி, ஞாயிறு ஆகிய 2 நாட்கள் விடுமுறையை பெதாடர்ந்து, இன்று சட்டப்பேரவை மீண்டும் கூடுகிறது. 13ம் தேதி வரை நடைபெறும் விவாதத்தில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்

இன்று முதல் (11ந்தேதி) பட்ஜெட் குறித்து எதிர்க்கட்சி தலைவர்கள், கட்சி உறுப்பினர்கள் தங்களது கருத்தை பதிவு செய்வார்கள். அதைத்தொடர்ந்து, வரும் 14ந்தேதி  விவாதத்திற்கு பதில் அளித்து நிதி அமைச்சரான ஓ.பி.எஸ் பதில் பேசுவார். அத்துடன் சட்டசபை கூட்டத்தொடர் ஒத்தி வைக்கப்படுகிறது.

பட்ஜெட் கூட்டத்தொடரின்போது,  முதல் ஒரு மணி நேரம் கேள்வி நேரம் எடுத்துக்கொள்ளப்படும். அப்போது சட்டமன்ற உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளிப்பார்கள்.

கேள்வி நேரம் முடிந்ததும், நேரமில்லா நேரத்தில் (ஜீரோ ஹவர்) எதிர்க்கட்சியினர் முக்கிய பிரச்சினைகள் எழுப்பி அதுகுறித்து அரசிடம் விளக்கம் கோருவார்கள்.

அதன்பின்னரே பட்ஜெட் மீதான விவாதம் தொடங்கும். இந்த விவாதத்தில் பங்கேற்று ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசுவார்கள். உறுப்பினர்களின் கேள்விகளுக்கு துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பதில் அளிப்பார்.

பொதுவாக, பட்ஜெட் கூட்டத் தொடரில், துறை சார்ந்த மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறும். விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால், மானியக் கோரிக்கைகள் மீதான விவாதமும், வாக்கெடுப்பும் தேர்தலுக்கு பிறகு ஜூன் மாதம் எடுத்துக்கொள்ளப்படும் என்று தெரிகிறது.

இந்த பட்ஜெட் கூட்டத்தொடரின்போது, ஆசிரியர்கள் போராட்டம், கஜா புயல் பாதிப்பு, விவசாயிகள் பிரச்சனை ஆகியவற்றை எதிர்க்கட்சிகள் எழுப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.