அவனியாபுரம்:

வனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கண்டு ரசித்தார்.

இந்த போட்டிகளை பற்றி ராகுல் காந்தி தெரிவிக்கையில், ஜல்லிக்கட்டு போட்டியை பார்ப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்றும், தமிழ் கலாச்ச்சாரம், தமிழின் சிறப்பு. அதனை கொண்டாட வந்திருக்கிறேன். நான் தமிழக மக்களோடு நிற்பது எனது கடமை அனவருக்கும் பொங்கல் வாழ்ந்து என்று தெரிவித்தார்.

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் அதிகபட்சமாக 5 காளைகளை மாடுபிடி வீரரான மதுரை முத்துப்பட்டியை சேர்ந்த திருநாவுக்கரசு அடக்கியுள்ளார்.

உலகப் புகழ்பெற்ற மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் காளைகள் சீறிப்பாயத் தொடங்கின.

தைப்பொங்கலையொட்டி தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு, ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. இந்தாண்டு, முதல் போட்டி, மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் இன்று தொடங்கியது.

போட்டியில், 430 வீரர்களும், 788 காளைகளும் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. போட்டி நடைபெறும் இடங்களில் குடிநீர், கழிவறை உள்ளிட்ட வசதிகள் செய்யபட்டு இருந்தது.

இன்றைய போட்டியில் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் அதிகபட்சமாக 5 காளைகளை மாடுபிடி வீரரான மதுரை முத்துப்பட்டியை சேர்ந்த திருநாவுக்கரசு அடக்கியுள்ளார்.