நிவர் புயல் காரணமாக நிறுத்தப்பட்டிருந்த பேருந்து சேவை இன்று பகல் 12மணி முதல் மீண்டும் தொடங்கும்… அரசு அறிவிப்பு

சென்னை: நிவர் புயல் காரணமாக  தமிழகத்தில் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்து சேவை இன்று நண்பகல் 12 மணி முதல் மீண்டும் தொடங்கும் என தமிழகஅரசு அறிவித்து உள்ளது.

வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த அதிதீவிரப் புயலான நிவர் புயல், வலுவிழந்து தீவிரப் புயலாக புதுச்சேரிக்கு வடக்கே கரையைக் கடந்தது. நேற்று இரவு 11.30 மணி முதல் இன்று அதிகாலை 2.30 மணி வரை புயல் கரையைக் கடந்தது. தற்போது  , ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர் ஆகிய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் பலத்த காற்றுடன்  மழை பெய்து வருகிறது. இன்னும் ஓரிரு மணி நேரத்தில் புயல் வலுவிழந்துவிடும் என வானிலை மையம் அறிவித்து உள்ளது.

இந்த நிலையில், நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தின் சென்னை உள்பட பல மாவட்டங்களில்  கடந்த 24-ம் தேதி மதியம் 1 மணி முதல்   நிறுத்தப்பட்டிருந்த பேருந்து சேவை இன்று (நவம்பர் 26) நண்பகல் 12 மணிக்குத் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.