பெங்களூர்,

ர்நாடகாவில் பெய்து வரும் கனமழை காரணமாக பா லத்தில் சென்ற பஸ் காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது.

கர்நாடகா கடாக் பகுதியில் இன்று காலை பெய்த பேய் மழையின் காரணமாக காற்றாற்று வெள்ளம் ஏற்பட்டது. இதன் காரணமாக பாலத்தின் மேலும் வெள்ளம் பாய்ந்தோடியது.

இதன் காரணமாக  ஆற்றின் பாலத்தில் மேல் சென்ற பஸ், வெள்ளத்தின் வேகம் காரணமாக அடித்து செல்லப்பட்டது.

 

கர்நாடகாவின் வடக்கு பகுதி யில் உள்ள கடாக் மாவட்டத்தில் இன்று காலை பலத்த மழை பெய்தது. இதனால் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. அப்போது  லக்‌ஷ்மேஸ்வரிலிருந்து டொட்டூரு நோக்கி சென்ற கர்நாடக அரசு பேருந்து வெள்ளத்தில் சிக்கி கவிழ்ந்தது. சிறிது தூரமும் இழுத்துச் சென்றது.

இதனால் பேருந்துக்குள் இருந்த பயணிகள் பயத்தில் அலறினர். சத்தம் கேட்டு அங்கு திரண்ட பொதுமக்கள், மீட்பு நடவடிக்கை எடுக்க போலீஸாருக்கு தகவல் அளித்ததோடு, பணிகளை காப்பாற்றும் முயற்சியில் இறங்கினர்.

பேருந்தின் அவசரகால வாசல் வழியாக பயணிகள் வெளியேறியதோடு, பேருந்தை ஒரு மரத்துடன் ஒரு கனமான கயிற்றால் கட்டி பயணிகளை மீட்டனர்.

இந்த பேருந்தில் குறைந்த பட்சம் 5 பேர் மட்டுமே பயணம் செய்ததாக கூறப்படுகிறது.