டெல்லி:

குடியுரிமை சட்டத் திருத்த மசோதா -வடகிழக்கு மாநிலங்கள் மீதான  மோடி, அமித்ஷாவின் குற்றவயில் குற்றவியல் தாக்குதல் என்றும், நான் அவர்களுடன் நிற்கிறேன் என்றும்  காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி கண்டனம் தெரிவித்து உள்ளார்.

மத்தியஅரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு வடகிழக்கு மாநிலங் களில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளன. அசாம் மாநிலத்தில் நேற்று முழு கடைஅடைப்பு நடை பெற்ற நிலையில், பொதுமக்கள் சாலையில் அமர்ந்து  தர்ணா போராட்டம் நடத்தி வருகின்றனர். அதுபோல நாகாலாந்து, திரிபுரா உள்படபல மாநிலங்களிலும் போராட்டம் வெடித்துள்ளது.

இந்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், மாநிலங்களவையில் நிறைவேற்ற மத்தியஅரசு முயற்சி எடுத்து வருகிறது. இந்த நிலையில், மசோதாவுக்கு  எதிர்த்து வடகிழக்கு மாநிலங்களில் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

‘இதுகுறித்து முன்னாள் காங்கிரஸ் கட்சித் தலைவரும், வயநாடு எம்.பி.யுமான ராகுல் காந்தி, தனது டிவிட்டர் பக்கத்தில் மத்தியஅரசின் நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

அவரது பதிவில், குடியுரிமை மசோதா என்பது மோடி-அமித்ஷா அரசு வடகிழக்கு மாநிலங்களை இனரீதியாக பிரிக்கும் முயற்சி. இது வடகிழக்கு மாநிலங்கள் மீதான குற்றவியல்  தாக்குதல். வடகிழக்கு மாநில மக்களின் பக்கம் நான் நிற்கிறேன், அவர்களுக்காக சேவையாற்றுவதே எனது நிலைப்பாடு என்றும் தெரிவித்து உள்ளார்.