தேர்தல் செலவை வேட்பாளர்களிடம் வசூலிக்க உத்தரவிட கோரிய வழக்கு தள்ளுபடி

சென்னை:

தேர்தல் ரத்து செய்யப்பட்ட தொகுதிகளுக்கான  தேர்தல் செலவை, அந்த தொகுதியில் போட்டியிடும்  வேட்பாளர்களிடம் வசூலிக்க உத்தரவிட கோரிய வழக்கை சென்னை உயர்நீதி மன்றம் தள்ளுபடி செய்தது.

டந்த  தமிழக சட்டமன்ற தேர்தலின் போது வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்பட்டதாக கூறப்பட்ட புகாரை தொடர்ந்து, தேர்தல் ஆணையம்  அரவக்குறிச்சி மற்றும் தஞ்சாவூர் சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தலை ஒத்தி  வைத்தது.

பின்னர் சட்டசபை தேர்தல் முடிந்த பின்னர் அந்த தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் நடத்தப்பட்டது.

இந்த நிலையில், அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தொகுதிகளில் போட்டியிட்ட திமுக, அதிமுக வேட்பாளர்களிடம் தேர்ல் செலவுக்கான பணத்தை வசூலிக்க வேண்டும் என சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில் இன்று தீர்ப்பு கூறப்பட்டது. அப்போது, தேர்தலில் போட்டி யிடும்  வேட்பாளர்களிடம் பணம் வசூலிக்க சட்டத்தில் இடமில்லை என கூறி, தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.