பணம் கொடுக்கும் வேட்பாளரை தகுதி நீக்க வேண்டும்…. திருமாவளவன்

சென்னை:

பணப்பட்டுவாடா செய்யும் வேட்பாளரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறினார்.

இது குறித்து அவர் கூறுகையில், ‘‘முதல்வர் செய்ய வேண்டிய பணிகளை ஆளுநர் செய்யக் கூடாது. ஆளுநரின் ஆய்வால் மாநில சுயாட்சி பறிபோகும் நிலை ஏற்படும். பணப்பட்டுவாடா செய்தால் தேர்தலை ரத்து செய்வதை ஏற்க முடியாது.

பணப்பட்டுவாடா செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதுடன், அந்த வேட்பாளரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்’’ என்றார்.

You may have missed