ஸ்டெர்லைட் ஆலை திறக்க பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக உயர்நீதி மன்றத்தில் வழக்கு!

மதுரை:

ஸ்டெர்லைட் ஆலை திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க கோரி  உயர்நீதி மன்றம் மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.

மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை 3 வாரத்திற்குள் திறக்க அனுமதிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டு உள்ளது. இது தூத்துக்குடி மக்களிடையே மீண்டும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ள நிலை யில்,  தேசிய பசுமை தீர்ப்பாய உத்தரவுக்கு எதிராக உயர்நீதிமன்ற மதுரை கிளையில்  மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மக்கள் கண்காணிப்பகம் அமைப்பைச் சேர்ந்த வழக்கறிஞர் ஹென்றி டிபேன், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு அமர்வில் முறையிட்டார். அப்போது முறையீட்டை மனுவாகத் தாக்கல் செய்தால் பரிசீலிப்ப தாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

இதையடுத்து மனுவாக தாக்கல் செய்யப்படும் என்று வழக்கறிஞர் ஹென்றி டிபேன் தெரிவித்துள்ளார்.