ரஜினி மீதான வழக்கு இன்று மதியம் விசாரணை

டிகர் ரஜினிகாந்த் மீது திரைப்பட பைனான்ஸியர் போத்ரா தொடுத்திருக்கும் வழக்கின் விசாரணை இன்று மதியம் நடக்க இருக்கிறது.

நடிகர் ரஜினிகாந்த் மீது சினிமா பைனான்சியர் போத்ரா, பண விவகாரம் தொடர்பாக வழக்கு தொடர்ந்திருக்கிறார். இந்த வழக்கு நேற்று ஜார்ஜ் டவுண் 8 வது நீதிமன்ற நீதிபதி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ரஜினி காந்த் தரப்பில் 8 வழக்கறிஞர்கள் கும்பலாக நீதிமன்றத்தில் ஆஜரானார்கள்.

இதனால் அதிர்ந்த நீதிபதி, விசாரணையை மறுநாளுக்கு (இன்று) ஒத்தி வைத்துவிட்டார்.

இன்று பிற்பகல் 2.30 மணிக்கு மேற்குறிப்பிட்ட வழக்கு விசாரணை நடக்க இருக்கிறது.

கார்ட்டூன் கேலரி