சத்துணவு முட்டை டெண்டரை எதிர்த்து உயர்நீதி மன்றத்தில் வழக்கு
சென்னை:
சத்துணவுக்கு முட்டை வழங்கப்படும் டெண்டரை எதிர்த்து சென்னை உயர்நீதி மன்றத்தில் கோழிப்பண்ணை கள் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.
சத்துணவு திட்ட முட்டை விநியோகத்துக்கான டெண்டர் நாளை முடிவு செய்யப்படும் நிலையில், 4 கோழிப் பண்ணைகள் உரிமையாளர்கள் சார்பில் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
சத்துணவுக்கு முட்டை வழங்கப்படும் டெண்டர் குறித்து நாளை இறுதி முடிவு செய்யப்பட உள்ளது. டெண்டரில் கோழிப்பண்ணையாளர்கள் 20 பேர்நாளை பங்கேற்கவுள்ளனர். இந்த ஆண்டு ஆறு மண்டலங்களாக பிரித்து முட்டை விநியோகத்திற்கான டெண்டர் வழங்க அரசு முடிவு செய்துள்ளது.
இந்த நிலையில், டெண்டருக்கு எதிர்ப்பு தெரிவித்து 4 கோழிப்பண்ணை உரிமையாளர்கள் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கில் நாளை தமிழகஅரசு பதில் அளிக்க சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது.