அன்புசெழியன் மீது கந்துவட்டி ஒழிப்பு சட்டத்தின்கீழ் வழக்கு: கருணாஸ்

சென்னை :

ந்துவட்டி கொடுமையால் தற்கொலை செய்துகொண்ட சினிமா தயாரிப்பாளர் அசோக்குமார் சாவுக்கு காரணமான அன்பு செழியன் மீது கந்துவட்டி ஒழிப்பு சட்டத்தின்கீழ் வழக்குபதிவு செய்து கைது செய்ய வேண்டும் என்று கருணாஸ் கூறி உள்ளார்.

நடிகர் சசிகுமாரின் உறவினர் அசோக்குமாரின், கந்துவட்டி கொடுமை காரணமாக நேற்று மாலை தற்கொலை செய்துகொண்டார். அவரது உடல் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு பிரேத பரிசோதனை நடைபெற்றது.

தற்போது பிரேத பரிசோதனை நிறைவு பெற்றது. அவரது  உடல் ஆம்புலன்ஸ் மூலம் சொந்த ஊரான மதுரை கோமதிபுரத்திற்கு எடுத்துச்செல்லப்பட உள்ளது.

இந்நிலையில்,  ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் உள்ள அசோக்குமாரின் உடலுக்கு ஏராளமான திரையுலகினர்  அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் அன்புசெழியன் தற்கொலை குறித்து கருத்து தெரிவித்துள்ள நடிகர் கருணாஸ்,  சசிகுமாரின் மைத்துனர் அசோக்குமாரின் தற்கொலைக்கு காரணமாக அன்புசெழியனை கந்துவட்டி ஒழிப்பு சட்டத்தின் கீழ்  கைது செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.