விமான போக்குவரத்து அமைச்சகம் மீது சிபி.ஐ. வழக்கு!

டில்லி,

த்திய விமான போக்குவரத்து அமைச்சகம், ஏர் இந்தியா விமான நிறுவனம் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது.

விமானங்கள் கொள்முதல் செய்ததில் ஊழல் நடந்துள்ளதாக விமான நிறுவன அதிகாரிகள் மற்றும் போக்குவரத்துறை அதிகாரிகள்மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது.

கடந்த காங்கிரஸ் ஆட்சியில் பிரபுல் பட்டேல் விமான போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த போது ஏர்இந்தியா நிறுவனத்துக்கு 111 விமானங்கள் வாங்கி ஏர் இந்தியா நிறுவனத்துக்கு குத்தகைக்கு விடப்பட்டது.

ஏர் இந்தியா விமான நிறுவனத்துக்கு 111 விமானங்கள் கொள்முதல் செய்ததில் 7 ஆயிரம் கோடி அளவுக்கு  ஊழல் நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், வரும் ஜூன் மாதத்துக்குள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.

இதையடுத்து விசாரணை நடத்திய சி.பி.ஐ., விமான போக்குவரத்துத் துறை அதிகாரி, ஏர்இந்தியா மற்றும் தேசிய விமான நிறுவன அதிகாரி, தனியார் குத்தகைதாரர் என மூவர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளது.