சிபிஐ துறையை கூவம் ஆறாக மாற்றிவிட்டார்கள்: முன்னாள் சிபிஐ அதிகாரி ரகோத்தமன்

சென்னை:

திப்புமிக்க சிபிஐ துறையை கூவம் ஆறாக மாற்றிவிட்டார்கள் என்று முன்னாள் சிபிஐ அதிகாரி ரகோத்தமன் கூறி உள்ளார்.

இவர்  ராஜீவ் காந்தி கொலை வழக்கு விசாரணை அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். விசாரணையின்போது, தனது போதுமான  ஒத்துழைப்பு கிடைக்கவில்லை என்று குற்றம் சாட்டி பரபரப்பை ஏற்படுத்தியவர்.

முன்னாள் சிபிஐ அதிகாரி ரகோத்தமன்

சிபிஐ இயக்குனர்களிடையே நடைபெற்ற மோதல், மற்றும் லஞ்ச லாவண்யம் தொடர்பாக பலர் அதிரடியாக மாற்றப்பட்ட நிலையில், சிபிஐ மீது மக்களுக்கு கடுமையான அதிருப்தி உருவாகி உள்ளது.

நான் சிறந்த புலனாய்வு அமைப்பதாக கருதப்பட்டி சிபிஐ-லும் லஞ்சம் தலைவிரித்தாடியது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அதன்மீதான நம்பகத்தன்மையையும் தகர்த்துவிட்டது.

இந்த நிலையில், தமிழகத்தை சேர்ந்த முன்னாள் சிபிஐ அதிகாரியும், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கு விசாரணை அதிகாரியுமான ரகோத்தமன் கூறியதாவது,

மத்திய புலனாய்வுத்துறையான சிபிஐ 1964ஆம் ஆண்டு முதல் மக்கள் மத்தியில் மதிப்பு மிக்கதாக இருந்து வந்தது. ஆனால், 1977ம் ஆண்டுக்கு பிறகே சிபிஐ துறையை கூவம் ஆறாக ஆட்சியாளர்கள்  மாற்றிவிட்டார்கள்.

இந்த நிலையில்தான் தற்போது சிபிஐ-யில் இயக்குனர்களிடையே அதிகார மோதல் ஏற்பட்டுள்ளது.

சிபிஐ அதிகாரிகளே லஞ்சம் வாங்குகிறார்கள் என்ற குற்றச்சாட்டு மக்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

இவ்வாறு ரகோத்தமன் கூறியுள்ளார்.