காவிரி விவகாரத்தில் வரைவுத் திட்டத்தை தாக்கல் செய்ய வேண்டியது மத்திய அரசின் பொறுப்பு: ஜெயக்குமார்

சென்னை:

காவிரி விவகாரத்தில் உச்சநீதி மன்ற தீர்ப்பின்படி,  வரைவுத் திட்டத்தை தாக்கல் செய்ய வேண்டியது மத்திய அரசின் பொறுப்பு என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

காவிரி தொடர்பான வழக்கில், கர்நாடக தேர்தலை காரணம் காட்டி, உச்சநீதி மன்ற தீர்ப்பை உறுதி செய்யாமல் மத்திய அரசு இழுத்தடித்து வந்தது. இந்நிலையில், கர்நாடக தேர்தல் கடந்த 12ந்தேதி முடிவடைந்து விட்டதால், காவிரி வழக்கு இன்று உச்சநீதி மன்றத்தில் இன்று நடைபெற உள்ள விசாரணையின்போத, வரைவுத் திட்டம் தாக்கல் செய்யப்படும் என்று மத்திய நீர்வளத்துறை செயலாளர் அறிவித்திருந்தார்.

அதன் இன்று பிற்பகல் காவிரி வழக்கு உச்சநீதி மன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது.

இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், இன்றைய விசாரணையின் போது ,மத்திய அரசு காவிரி வரைவு திட்டத்தை தாக்கல் செய்யும் என்று தாம் நம்புவதாகவும், வரைவுத் திட்டத்தை தாக்கல் செய்ய வேண்டியது மத்திய அரசின் பொறுப்பு என்றும் கூறினார்.

மேலும், செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் ஜெயக்குமார்,  கர்நாடகாவில் யார் ஆட்சி அமைத்தாலும் எங்களுக்கு கவலை இல்லை, நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த வேண்டும் என்றும் அவர் கூறினார்.