மோடி கேர் திட்டத்தில் வரும் 14ந்தேதி 14 மாநிலங்களுடன் ஒப்பந்தம்: மத்தியஅமைச்சர் நட்டா

டில்லி:

மோடி கேர் எனப்படும் தேசிய சுகாதாரத் திட்டத்தில் இணைய வரும் 14ந்தேதி 14 மாநிங்களுடன் ஒப்பந்தம் போடப்பட இருப்பதாக மத்திய இணைஅமைச்சர் ஜே.பி.நட்டா தெரிவித்து உள்ளார்.

மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி கடந்த பிப்ரவரி 1-ம் தேதி தாக்கல் செய்த பட்ஜெட்டில் மோடி கேர் திட்டம் குறித்து அறிவித்திருந்தார். இந்த திட்டத்தின்படி,  இந்தியாவில் உள்ள 10 கோடி ஏழை குடும்பங்கள் பயன்பெறும் வகையில் தேசிய சுகாதார பாதுகாப்புத் திட்டம் (Modi Care) கொண்டு வரப்படும் என்றும்,  ஏழை, எளிய மக்கள் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவக் காப்பீடு பெற முடியும் என்றும்,  இதற்கான செலவினங்களில் 40% மாநில அரசுகள் பங்களிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த திட்டத்திற்கு ஆரம்பம் முதலே மேற்குவங்க முதல்வர் எதிர்ப்பு தெரிவித்து வந்தார். தற்போதைய நிலை யில் மேற்கு வங்கமும் டில்லி மாநில அரசு மட்டுமே மோடி கேர் திட்டத்தில் இணைய மறுத்து வருவதாகவும் மற்ற மாநிலங்கள் இணைய சம்மதம் தெரிவித்து உள்ளதாகவும்  மத்திய அமைச்சர் தெரிவித்து உள்ளார்.

டில்லி, ஒடிசா, பஞ்சாப் மற்றும் மேற்கு வங்காளம்  மாநிலங்களிலும் பா.ஜ.க. அதிகாரத்தில் இல்லாத நிலையில்,  மற்ற 14 மாநிலங்களில் ஜூன் 14ந்தேதியன்று  ஒப்பந்தங்களை கையெழுத்திட இருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும, மோடி கேர்திட்டத்தில் இணைய அனைத்து மாநிலங்களுக்கும் ஆலோசனை வழங்கப்பட்டு வருவதாகவும், குஜராத், மத்தியப் பிரதேசம், உத்திரப் பிரதேசம், பீகார், ஆந்திரப் பிரதேசம், கேரளா, அந்தமான் நிக்கோபார் தீவுகள் மற்றும் தமிழ்நாடு ஆகியவை விரைவில் ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் என்றார்.

ஏற்கனவே இமாச்சல பிரதேசம், அரியானா, ஜம்மு காஷ்மீர், உத்தரகண்ட் மற்றும் சண்டிகர் ஆகிய மாநிலங்கள் மோடி கேர் சுகாதார காப்பீடு திட்டத்தில் கையெழுத்திட்டுள்ள என்றும், 8 மாநிலங்களும், நான்கு யூனியன் பிரதேசங்களும் கையெழுத்திட்டுள்ளன என்றும் தெரிவித்துள்ளார்.

மோடி கேர் திட்டத்தின் பயன்கள் என்னென்ன?

“மோடி கேர்” சுகாதார திட்டத்தின்படி, 1354  மருத்துவ சிகிச்சைக்கான கட்டணத்தை மத்திய அரசு தெரிவித்து உள்ளது. இந்த திட்டத்தின் கீழ், ஒவ்வொரு வருடமும் 5 லட்சம் வரை பயன்படுத்திக்கொள்ளலாம் என்றும், இருதய சிகிச்சை, கண் சிகிச்சை, சிறுநீரக அறுவை சிகிச்சை, பச்சிளங் குழந்தைகளுக்கான சிகிச்சை என அனைத்து சிகிச்சையும் அளிக்கப்படும் என்றும் தெரிவித்து உள்ளது.

இந்த திட்டத்தின்படி மருத்துவ செலவுகளுக்கான கட்டண விவரங்களும் தெரிவிக்கப்பட்டுள்து.

இதய வால்வு மாற்று அறுவை சிகிச்சை – ரூ. 1.20 லட்சம்

நுரையீரல் அறுவை சிகிச்சைக்கு  – ரூ. 45,000

இடுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு – ரூ. 90,000

மூட்டு மாற்று அறுவை சிகிச்சை – ரூ. 80,000

கர்ப்பப்பை அகற்றுதல் – ரூ.20,000

குடல் இறக்குதல் –  ரூ.15,000

மகப்பேறு அறுவை சிகிச்சை – ரூ. 9,000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின்கீழ்  அரசு  ஊழியர்கள், ஓய்வூதியக்காரர்களும் பங்குபெறலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த திட்டத்தின் கீழ் மருத்துவ ஆலோசனை கட்டணம், மருந்துகள், ரத்த பரிசோதனை, நோயாளி களுக்னான உணவு, சிகிச்சை முடிந்த பின் ஏற்படும் கட்டணம் அனைத்தும் அடங்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: The Centre has announced that it will sign MOUs with 14 states on June 14
-=-