நாளை (மே19 ) முதல் தாற்காலிக மதிப்பெண் சான்றிதழ் பெறலாம்

ோ

கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற ப்ளஸ் டூ தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. இத் தேர்வை எழுதியவர்கள்  தங்களுக்கான தாற்காலிக மதிப்பெண் சான்றிதழை  நாளை (வியாழக்கிழமை  – மே 19) முதல்  இணையம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மாணவர்கள், தங்களது பிறந்த தேதி, பதிவெண் ஆகிய விவரங்களை www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில் அளித்து தாங்களே பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். மேலும் மே 21-ஆம் தேதி முதல் தேர்வர்கள் தாங்கள் படித்த, தேர்வெழுதிய பள்ளி, மையத்தின் தலைமை ஆசிரியர் மூலமாகவும் தங்களது தாற்காலிக மதிப்பெண் சான்றிதழை பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.