Random image

தமிழகத்தில் இடியுடன் கன மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம்

சென்னை:

மிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்திற்குள் சில இடங்களில்  இடி மின்னலு டன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலைமை மையம் தெரிவித்துள்ளதாவது,  தெற்கு உள் கர்நாடக பகுதிகளில் நிலவி இருந்த வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சி தற்போது வடக்கு உள் தமிழகத்தில் நிலவி வருகிறது.

இதன் காரணமாகவும், வெப்பச்சலனம் காரணமாகவும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில்  அடுத்த 24 மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், அதே போல் ஒரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும்  தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பெரம்பலூர் மாவட்டம் செட்டிக்குளத்தில் தலா 10 செ.மீட்டர் மழை பதிவாகி உள்ளது. மேலும் விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் தலா 7 செ.மீட்டர் மழையும், கிருஷ்ணகிரி, திருச்சி மாவட்டம் புள்ளம்பாடி, திருவள்ளுவர் மாவட்டம் தாமரைப் பாக்கம், விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி உள்ளிட்ட இடங்களில் தலா 6 செ.மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.

அதே போல் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம், சிவகங்கை, வேலூர் மாவட்டம் ஆலங் காயம், தஞ்சை அணைக்கட்டு, நாமக்கல் மற்றும் திருச்சி துவாக்குடியில் தலா 4 செ.மீட்டர் மழையும் பதிவாகி உள்ளது. சென்னையை பொருத்த வரை வானம் மேக மூட்டத்துடன் இருக்கும், மாலை அல்லது இரவில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது, அதிகபட்சமாக 36 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும், குறைந்தபட்சமாக 27 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் பதிவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு வானிலை மையம் தெரிவித்துள்ளது.