Random image

தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை மையம் தகவல்

சென்னை:

மிழகத்தில் இன்று  ஒருசில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.  சூறைக்காற்றுடன் மழை பெய்யலாம் என்றும் கூறி உள்ளது.

தமிழகத்தில் சுட்டெரிக்கும் வெயில் கொளுத்தும் நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு உள் மாவட்டங்க ளில் திடீரென மழை பெய்து கோடை வெப்பத்தை தணித்தது. இந்த நிலையில்,  தென்கிழக்கு வங்கக்கடல், இந்திய பெருங்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை நிலவி வருவதால், தமிழகத்தில் இன்று சில இடங்களில் 40 முதல் 50 கி.மீ வேகத்தில் சூறைக்காற்றுடன் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

மேலும் நாளை  முதல் 24-ஆம் தேதி வரையிலும் தமிழகத்தில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு  இருப்பதாகவும் இந்திய வானிலை மையம் தெரிவித்து உள்ளது.

I