சென்னை:

கொரோனா தொற்று பரவலை தடுக்கும் நடவடிக்கையாக வாகன போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ள நிலையில், வீடுகளில் இருந்து சிகிச்சை பெற்று வருபவர்கள், கஷ்டப்பட்டு மருத்துவமனைக்கு சென்றால், அவர்களிடம் அடுத்த சிகிச்சைக்கு 21 நாட்களுக்கு பிறகுதான் வரவேண்டும் என்று எழுதி வாங்கப்படுவதாக கூறப்படுகிறது.

தனியார் மருத்துவமனைகளின் இந்த நடவடிக்கை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னையில் உள்ள பிரபலமான தனியார் மருத்துவமனை ஒன்றில், புற்றுநோய்க்காக, சிகிச்சைக்கு சென்ற முதியவர் ஒருவருக்கு வழக்கமாக கீமோ தெரபி வழங்கி வரும் தனியார் மருத்துவமனை, சிகிச்சை அளித்ததுடன், அடுத்த சிகிச்சைக்கு 21 நாட்கள் கழித்துதான் வருவேன் என்று எழுதி வாங்கி உள்ளது.

மருத்துவமனையின் மனிதாபிமானமற்ற  நடவடிக்கையால் அதிர்ச்சி அடைந்த நபர் நம்மிடம் கூறியதாவது,

கடந்த  செவ்வாய் மதியம், Radiation Theraphy க்குப்பிறகு, அந்த தனியார் மருத்துவமனை தன்னிடம் ஒரு Statement ல் கையொப்பம் பெற்றனர்.

எனக்கு, 7 radiation முடிந்தது. இன்னும் 3 radiation தொடர்ந்து நடக்க வேண்டும்.

ஆனால், 21 நாளுக்குப் பிறகு, Radiation தொடரலாம் என்று சொல்லி, கையொப்பம் பெற்று, வீட்டுக்கு அனுப்பிவிட்டனர்.

இதில் கொடுமை என்னவென்றால், தனது விருப்பத்தின்பேரில், இந்த படிவத்தில் கையெழுத்து போடுவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

இது தனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாகவும், தனது நோய் விரைவில் குணமாகும் என எதிர்பார்த்த நிலையில், மருத்துவமனை நிர்வாகத்தின் இந்த நடவடிக்கை தனது நோயின் தாக்கத்தை மேலும் மோசமாக்கும் செயல் என்றும், இது கண்டனத்துக்கு உரியது என்று கூறி உள்ளார்.

இதுபோன்று தனியார் மருத்துவமனைகளால் அலைக்கழிக்கப்படும் நோயாளிகளைக் கவனத்தில் கொண்டு, தமிழகஅரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், வீடுகளில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் மருத்துவ மனைக்கு செல்ல, அவர்களுக்கு ஆம்புலன்ஸ் வசதி செய்து தர வேண்டும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழகஅரசு ஆவன செய்யும் என்று நம்புகிறோம்.