சென்னை:

போக்குவரத்து விதிகளை மீறி வாகனங்கள் ஓட்டி செல்பவர்களின் வீடுகளுக்கு, போக்குவரத்து காவல்துறையில் இருந்து அவர்களின் வீடுகளுக்கு அபராதம் விதிக்கப்படும் செல்லான் அனுப்பப்பட்டு வருகிறது.

நாள் ஒன்றுக்கு சுமார் 1200 பேர் பேர் போக்குவரத்து விதிகளை மீறி வாகனங்களை செலுத்தி வருவதாகவும், அவர்களின் வாகன எண்களை வைத்து, அவர்களின் முகவரிக்கு அபராதத்துக்கான இசலான் அனுப்பி வைக்கப்பபடுவதாக போக்குவரத்து காவல்துறையினர் தெரிவித்து உள்ளனர்.

தமிழகத்தில் போக்குவரத்து விதிகள் கடுமையாக அமல்படுத்தப்பட்டு வருகிறது.  ஹெல்மெட் அணியாதவர்கள், சீட் பெல்ட் போடாதவர்கள், சிக்னலை மீறி வாகனத்தை ஓட்டி செல்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. போக்குவிதிகளை மீறி செல்லும் வாகனங் களை, அந்த பகுதியில் உள்ள காமிரா உதவியுடன் கண்டறிந்து, வாகனத்தின் பதிவு எண்ணின் வாயிலாக அவர்களின் வீடுகளுக்கு புகைப்படத்துடன் கூடிய நோட்டீஸ் அனுப்பப்பட்டு வருகிறது.

அந்த நோட்டீசில் வண்டி எண், விதிமீறிய இடம், செல்லான் நம்பர் உடன் எவ்வளவு அபராம் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த அபராத்தை உடனே செலுத்தும்படியும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

இதுகுறித்து கூறிய போக்குவரத்து காவல்துறை அதிகாரி,  சென்னை காவல்துறையினர் ஒவ்வொரு நாளும் குறைந்தது 1,200 வழக்குகள் தொடர்பாக, வாகனங்கள் பதிவுசெய்யப்பட்ட முகவரிகளுக்கு இ-சல்லான்களை அனுப்புகின்றனர். வாகனத்தின் எண்ணை அடையாளம் காணக்கூடிய கேமராக்களில் சிக்கியவர்களைத் தவிர, வாகனத்தின் பதிவு எண்ணின் புகைப்படங்களைக் கிளிக் செய்வதன் மூலம் அதிகாரிகளிடம் இருந்து தப்பிச் சென்றவர்களை காவல்துறை பதிவு செய்கிறது.சலான் பெற்றவர்கள், அடுத்த  24 மணி நேரத்திற்குள் அபராதம் செலுத்த வேண்டும்.

சென்னையின் முக்கிய சந்திப்புகளில்  தினசரி ஏறக்குறைய 4,000 விதிமீறல்களைக் கண்டறிப்படு கிறது என்றும்,  அதை .  ஆராய்ந்து ஒரு நாளைக்கு சுமார் 500 பேருக்கு சல்லான்கள் வழங்கப் படுவதாகவும்  கூறினார்.