இலவச பாடப்புத்தகங்கள், கல்வித் தொலைக்காட்சி திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் எடப்பாடி…

சென்னை:
மிழகத்தில் 10ம் வகுப்பு 12ம் வகுப்புக்கான இலவச பாடப்புத்தகங்கள் மற்றும்  கல்வித் தொலைக் காட்சி திட்டத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைத்தார்.
தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று மாலை தலைமைச்செயலகத்தில்புதிய திட்டங்கள் தொடக்க விழா காணொளி காட்சி மூலம்  நடைபெற்றது.
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான இலவச பாடப்புத்தகங்கள் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்து, முதலமைச்சர்  எடப்பாடி பழனிசாமி புத்தகங்களை வழங்கினார்.
தொடர்ந்து, 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசின் கல்வி தொலைக்காட்சி மூலம் கல்வி நிகழ்ச்சி மற்றும் பிறவகுப்பு பாடங்களுக்கான ஒளிபரப்பினையும் முதல்வர் தொடங்கி வைத்தார்