நெட்டிசன்:

நியான்டர் செல்வன் (Neander Selvan) முகநூல் பதிவு…

பிலிப்பைன்ஸை ஆண்ட சோழர்கள்

இது எந்த சோழ மன்னன் காலத்திய சம்பவம் என தெரியாது. ராஜேந்திர சோழன் அல்லது அவனுக்கு பிந்தைய சோழ மன்னன் யாராவதாக இருக்கலாம்.

சீனாவுடனான வணிகதொடர்புக்கு ஸ்ரீ விஜயம் (இந்தோனெசியா)வுடன் வணிக, கலாசார உறவை மேம்படுத்துவது அவர்களுக்கு மிக முக்கியமாக இருந்துள்ளது. அதனால் சோழ இளவரசன் ஒருவனை ஸ்ரீ விஜய நாட்டு பெண்ணுக்கு மணம் செய்து வைக்கிறார் சோழ மன்னர்.

அந்த பெண்ணுக்கும், சோழன் வாரிசுக்கும் பிறந்தவன் ஸ்ரீ லுமே (Sri Lumay) எனும் வீரன். இவனது தமிழ் பெயர் என்னவோ? ஆனால் பிலிப்பைன்ஸ் மொழியில் பெயர் திரிந்து ஸ்ரீ லுமே என வழங்குகிறது. ஸ்ரீ லுமே ஸ்ரீ விஜய நாட்டை சேர்ந்த தமிழன், சோழன் என பிலிப்பைன்ஸில் அனைவரும் நம்புகிறார்கள். Sri Lumay விக்கிபிடியா பக்கத்தை பார்க்கலாம். பல தரவுகள் உள்ளன.

இந்த ஸ்ரீலுமேவை பிலிப்பைன்ஸில் உள்ள செபு எனும் பகுதியை பிடித்து ஆட்சி ஆட்சி அமைக்க பணிக்கிறார் சோழமன்னர். சீனாவுக்கு செல்லும் கடல்வழியில் சோழர் ஆதிக்கம் உள்ள பகுதி இருக்கவேண்டும் என செய்த ஏற்பாடு அது. கடற்கொள்ளையர் தொல்லை அதிகம் உள்ள பகுதி அது. சோழர்களின் கடல்வணிகத்தை காப்பாற்ற செபுவை பிடித்தே ஆகவேண்டும்

ஸ்ரீ லுமே அதன்படி செபு பகுதியை பிடிக்கிறார். அதன் பெயர் சுக்பு ராஜானேட் என வழங்குகிறது. சுக்பு ராஜானேட் என்பது எதாவது தமிழ் பெயரின் திரிபாக இருக்கலாம். இன்று மேலும் திரிந்து செபு என வழங்குகிறது

ஸ்ரீ லுமேவுக்கு பல மகன்கள். அனைவரும் பிரிந்து பிலிப்பைன்ஸின் பல பகுதிகளை தம் ஆதிக்கத் துக்கு கொண்டு வருகிறார்கள். கடற்கொள்ளையர்களை எதிர்த்து போரிட்டு பலர் உயிரையும் இழக் கிறார்கள்.

ஸ்ரீ லுமேவின் மகன் ஸ்ரீ பன்டுங். இவன் சிங்கபால நகரம் எனும் நகரை அமைக்கிறான். இது இன்றைய செபு நகரம்.

இப்படியே தொடர்ந்த சோழ வம்சம் 1565 ஆண்டுவரை பிலிப்பைன்ஸை ஆள்கிறது. 1565ல் ஸ்பானி யர்கள் பிலிப்பைன்ஸில் கால் பதிக்கிறார்கள். கடைசி சோழ மன்னன் துபாஸ். ஸ்பானிய தளபதி மைக்கேல் லோபஸ் என்பவனுடன் போரிட்டு உயிரை விடுவதுடன் சோழ வம்சத்தின் ஆட்சி பிலிப்பைன்ஸில் முடிவுக்கு வருகிறது.

ஆக பிலிப்பைன்ஸில் தேடினால் சோழர்களின் சுவடுகள் பல கிடைக்கும்.