சென்னை:

ருப்புகோட்டை பேராசிரியை நிர்மலாதேவி, மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த விவகாரத்தில், ஆளுநர் மாளிகைக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தன்னிச்சையாக விசாணை கமிஷன் அமைத்து நடவடிக்கை எடுத்தார். இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில், டிடிவி தினகரன், ஆளுநரின் செயலுக்கு கண்டனம் தெரிவித்து உள்ளார்.

பேராசிரியை விவகாரத்தில்,  மாநில அரசு அமைத்துள்ள விசாரணை கமிஷன் நம்பகத்தன்மையைக் கொண்டிருக்கவில்லை. அதே நேரத்தில், ஆளுநரால் உருவாக்கப்பட்ட ஆணைக்குழு சந்தேகத்தை உருவாக்குகிறது என்று தெரிவித்து உள்ளார்.

ஆளுநர் விசாரணை கமிஷன் அமைத்திருப்பது எடப்பாடி தலைமையிலான தமிழக அரசுக்கு அவமானம் என்றும், நேற்றைய செய்தியாளர்கள் சந்திப்பின்போது, பெண் செய்தியாளர் கன்னத்தில் ஆளுநர் தட்டிய செயல் கன்டனத்துக்குரியது என்றும் கூறி உள்ளார்.

ஆளுநரின் அத்துமீறிய செயல் காரணமாக தமிழகத்தில் பிரச்சினைகள் உருவாகி வருவதாகவும், விளைவுகள் பெரிதாகும் முன்  ஆளுநர் பதவிக்கான மாண்பை காப்பாற்ற தமிழக ஆளுநர் தாமாகவே டெல்லி திரும்பிட வேண்டும்.

இவ்வாறு டிடிவி தினகரன் கூறியுள்ளார்.