கொரோனாவை எதிர்கொள்ளும் வகையில் தேர்தலில் பாதுகாப்பாக ஓட்டளிக்க, புதிய வழிகாட்டு நெறிமுறைகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதனை ஏற்க காங்கிரஸ் கட்சி மறுத்து விட்டது.

இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள் இவை:

+ தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகள் எந்த விதத்திலும், கொரோனா தாக்கத்தை சமாளிக்கும் வகையில் இல்லை.

+ நாங்கள்( காங்கிரஸ்) தெரிவித்த பல யோசனைகள் பரிசீலிக்கப்படவே இல்லை. தேர்தல் ஆணையமே, இஷ்டம் போல் விதிமுறைகளை வெளியிட்டுள்ளது.

+ மின்னணு எந்திரம் மூலம் ஓட்டுப்பதிவு நடந்தால், நோயின் தாக்கம் பரவும் என்று கூறி இருந்தோம். ஆனால். மின்னணு எந்திரங்களை சானிடைசர் மூலம் சுத்தம் செய்வதால், வைரஸ் இருக்காது என்று ஆணையம் சொல்கிறது. கடந்த 6 மாதங்களில், சானிடைசர் கொரோனாவை தடுக்கும் என்பதற்கு முழுமையான ஆதாரம் எதுவும் காட்டப்படவில்லை.

+ விதிமுறைகளை வகுக்க, காங்கிரஸ் தெரிவித்த யோசனைகளை மீண்டும் படித்து பார்க்குமாறு தேர்தல் ஆணையத்தை கேட்டுகொள்கிறோம்..

+ அனைத்து கட்சிகளிடம் மீண்டும் ஆலோசனை நடத்தி. வெளிப்படையாக விவாதித்து, புதிய வழிகாட்டு நெறிமுறைகளை தேர்தல் ஆணையம் அறிவிக்க வேண்டும்.

மேற்கண்டவாறு வேணுகோபால் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

-பா.பாரதி.