இந்திய நாட்டைக் காப்பாற்ற வேண்டிய கடமை காங்கிரசுக்கு உள்ளது: சிதம்பரம் டிவிட்

டில்லி:

ந்திய நாட்டைக் காப்பாற்ற வேண்டிய கடமை காங்கிரசுக்கு உள்ளது என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் 5 மாநில தேர்தல் முடிவுகள் குறித்து கூறி உள்ளார்.

டைபெற்று முடிந்துள்ள 5 மாநில சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்று 3 மாநிலங்களில் ஆட்சியை கைப்பற்றி உள்ளது. இது நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் அயராத உழைப்புக்கு கிடைத்த வெற்றி என்று காங்கிரஸ் தொண்டர்கள் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில், முன்னாள் மத்திய நிதி அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் களில் ஒருவருமான ப.சிதம்பரம் காங்கிரஸ் வெற்றி குறித்து டிவிட்டரில் பதிவிட்டு உள்ளார்.

அதில்,

காங்கிரஸ் கட்சியின் மகத்தான கடமை இப்பொழுது தான் தொடங்குகிறது. இன்னும் பல சிகரங்களைக் கைப்பற்றி இந்திய நாட்டைக் காப்பாற்ற வேண்டிய கடமை உள்ளது

இந்தத் தேர்தல்கள் கற்ப்பித்த பாடம்: காங்கிரஸ் கட்சியின் அயராது பாடுபடும் தொண்டர் களை ஒருபோதும் குறைத்து மதிப்பிடாதீர்கள்

மூன்று மாநிலங்களில் காங்கிரஸ் கட்சிக்கு வெற்றியைத் தந்து இந்திய அரசியல் சாதனத்தைக் காப்பாற்றிய அந்த மாநிலங்களின் வாக்காளர்களுக்கு நாடே கடமைப்பட்டிருக்கிறது.

இவ்வாறு ப.சிதம்பரம் பதிவிட்டுள்ளார்.