நாளை கூடுகிறது காங்கிரஸ் காரியக் கமிட்டி

புதுடெல்லி:
காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவர் பற்றிய பேச்சுகள் எழுந்து வரும் நிலையில், நாளை கட்சியின் காரியக் கமிட்டிக் கூட்டம் கூடுகிறது.

இதுபற்றி காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் சுட்டுரையில் வெளியிட்ட அறிவிப்பு:

“காங்கிரஸ் காரியக் கமிட்டிக் கூட்டம் திங்கள்கிழமை ஆகஸ்ட் 24, 2020 அன்று காலை 11 மணிக்கு காணொலி வாயிலாக நடைபெறும். “காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து ராகுல் காந்தி விலகியதைத் தொடர்ந்து, கட்சியின் இடைக்காலத் தலைவராக சோனியா காந்தி பொறுப்பேற்றார். சோனியா காந்தி பொறுப்பேற்று ஒரு ஆண்டு காலம் ஆன நிலையில், கட்சிக்குள் மீண்டும் காங்கிரஸ் தலைவர் பற்றிய பேச்சுகள் எழத் தொடங்கின. ராகுல் காந்தியே மீண்டும் காங்கிரஸ் தலைவராகப் பொறுப்பேற்கலாம் என்ற பேச்சுகளும் கட்சிக்குள் அடிபட்டு வருகின்றன.எனவே, இந்தக் கூட்டத்தில் நாட்டில் நிலவும் சூழல் குறித்து மட்டுமல்லாமல், காங்கிரஸ் தலைவர் பற்றிய விவகாரம் குறித்தும் ஆலோசிக்கப்படவுள்ளது.