டில்லி:

ச்சநீதி மன்ற தலைமை நீதிபதி மீதான பாலியல் புகார் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், உச்சநீதிமன்ற அரசியல்சாசன அமர்வில் நடைபெற இருந்த  விசாரணைகளி  ரத்து செய்யப்பட்டுள்ளதாக உச்சநீதி மன்றத்தின்அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்  5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு செயல்பட்டு வருகிறது. இந்த அமர்வில் முக்கியமான சில வழக்குகள் இந்த வாரம் நடைபெற இருந்த நிலையில், பாலியல் குற்றச்சாட்டு எழுந்துள்ளதால், அரசியல் சாசன அமர்வின் விசாரணைகள் ரத்து செய்யப்படுவதாக உச்ச நீதிமன்ற இணையதளத்தில்  அறிவிக்கப்பட்டு உள்ளது.

அரசியல் சாசன அமர்வில், அயோத்தி சர்ச்சைக்கரிய  நில ஆர்ஜித வழக்கு, நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத்தில் வாக்களிக்க லஞ்சம் பெறும் மக்கள் பிரதிநிதிகள் மீது வழக்கு தொடர முடியாத அளவுக்கு அரசியல் சாசனப்பிரிவில் பாதுகாப்பு உள்ளதா என்பது உட்பட முக்கிய வழக்குகளை உச்ச நீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரணை நடத்துவதாக இருந்தது. இந்த நிலையில், உச்ச நீதிமன்ற வெப்சைட்டில் வெளியிடப்பட்ட அறிவிப்பில், ‘‘உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு, இந்த வாரம் நடத்தும் வழக்குகளின் விசாரணை ரத்து செய்யப்படுகிறது’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.