ஒப்பந்த செவிலியருக்கான சம்பளம் ரூ.14 ஆயிரமாக உயர்வு: தமிழக அரசு தகவல்

சென்னை:

மிழக மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரிந்து வரும் ஒப்பந்த செவிலியர்களுக்கான ஊதியம் ரூ.14 ஆயிரமாக உயர்த்தப்படும் என்று  சென்னை உயர்நீதி மன்றத்தில் தமிழக அரசு தகவல் தெரிவித்து உள்ளது.

கடந்த ஆண்டு நடைபெற்ற  செவிலியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தின்போது ,சென்னை உயர்நீதி மன்றத்தின் உறுதிமொழியை தொடர்ந்து வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டது.

இது தொடர்பான வழக்கில், செவிலியர்கள் கோரிக்கை குறித்து  6 மாதத்தில் பரிசீலித்து முடிவெடுக்க சுகாதார செயலர் தலைமையிலான குழுவுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கின் இன்றைய விசாரணையின்போது, அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில்,  ஒப்பந்த செவிலியர்களின் சம்பவம்  ரூ.7000லிருந்து ரூ.14 ஆயிரமாக உயர்த்தி 15 நாட்களுக்குள் அரசாணை வெளியிடப்படும் என  தமிழக அரசு உறுதியளித்துள்ளது.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Tamil Nadu government said in to the chennai high court, The contract nurses salary will be increase to 14000 rupees, ஒப்பந்த செவிலியருக்கான சம்பளம் ரூ.14 ஆயிரமாக உயர்வு: தமிழக அரசு தகவல்
-=-