மகனுக்கும் விஷம் கொடுத்து தம்பதி தற்கொலை!

கரூர்:

ம்பதி விசம் குடித்தோதடு மகனுக்கும் விசம் கொடுத்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கரூர் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கரூர் அருகே உள்ள தெற்கு காந்தி கிராமம் வசித்து வந்தவர் வனத்துறை அலுவலர் புகழேந்தி(45). இவரது மனைவி மலர்கொடி(37). இவர்களது மகன் சுகன்ராஜ்(12).

மூவரும் இன்று அவர்களது வீட்டில் விசம் குடித்து உயிருக்குப் போராடிய நிலையில் கிடந்தனர். இதைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். பிறகு காவலர்கள் மூவரையும் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

இவர் தென்னை மரத்திற்கு வைக்கும் விஷமருந்தை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. சிகிச்சை பலனளிக்காமல் மூவரும் உயிரிழந்தனர்.

இது குறித்து பசுபதி பாளையம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றார்கள்.

கடந்த எட்டு மாதங்களுக்கு முன்பு புகழேந்தி சாலை விபத்தில் முதுகு தண்டு வடம் பாதிக்கப்பட்டு இடுப்புக்கு கீழே உணர்வற்ற நிலையில் இருந்து வந்ததாகவும் இதனால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக விஷமருந்தை சாப்பிட்டு குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டதாகவும் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.