நீதிமன்றத்தில் ஆதாரம் ஆகிறது ‘வாட்சப்’ புளு “டிக்”

டில்லி,

வாட்ஸ்அப் தகவல்களும் ஆதாரமாக எடுத்துக்கொள்ளப்படும் என டில்லி கோர்ட்டு நிதிமன்றம் கூறியுள்ளது.

டிஜிட்டல் வளர்ச்சியின் அபார வளர்ச்சி காரணமாக இணைய வலைளதளங்கள் மூலமாக பெரும்பாலான பரிவர்த்தனைகள் நடைபெற்று வருகின்றன.

அதுபோல் இந்தியாவில் மோடி ஆட்சிக்கு வந்தபிறகு டிஜிட்டல் இந்தியாவை உருவாக்க முயற்சித்து வருகிறார். அதன் காரணமாக பெரும்பாலான சேவைகள் இணையம் மூலமே பயன்படுத்தப்பட்டு வருகிறது.

தற்போது கோர்ட்டுகளும் டிஜிட்டல் மயமாகி வருகிறது. இதைத்தொடர்ந்து டில்லி கோர்ட்டு ஒன்றில், வாட்ஸ்அப் மூலம் அனுப்பப்படும் தகவல்களும் ஆதாரமாக எடுத்துக்கொள்ளப்படும் என நீதிபதி கூறியுள்ளார்.

சொத்து பிரச்சினை குறித்த வழக்கில், டில்லி சாணக்கியபுரியை சேர்ந்த ஒரு குடும்பத்தால் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கில், மகளுக்கு தந்தை வழக்கு குறித்த நோட்டீசை வாட்ஸ்அப் மூலமாக அனுப்பி உள்ளார்.

பொதுவாக வாட்ஸ்அப்-பில் அனுப்பப்படும் தகவல்களை, தகவல் பெறுபவர் படித்துவிட்டால் அது ஆட்டோமாடிக்காக புளு கலரில் டபுள்டிக் ஆகி விடும். இது வாஸ்அப் தகவல் அனுப்பியவருக்கும் தெரிந்துவிடும் என்பது அனைவரும் அறிந்ததே.

இந்த வழக்கிலும் வாட்ஸ்அப் மூலம் அனுப்பப்பட்ட தகவல் பார்த்தை உறுதி செய்தது புளு டிக். ஆகியிருந்தது.

ஆனால், விசாரணையின்போது வழக்கு குறித்து நோட்டீஸ் வரவில்லை என்று அவர் மறுப்பு தெரிவித்தார்.

ஆனால், அப்பெண்ணின் தந்தையோ,  நோட்டீஸ் படித்ததற்கான .புளூடிக் கொண்ட திரையை ஸ்கிரீன்சாட் எடுத்து அதனையே ஆதாரமாக கோர்ட்டில் சமர்ப்பித்தார்.

இதை ஆதாரமாக ஏற்றுக்கொண்ட டில்லி கோர்ட்டு, அடுத்தகட்ட விசாரணைக்கு உத்தரவிட்டார்.

ஏற்கனவே கடந்த 4ந்தேதி நடைபெற்ற ஒரு வழக்கின் விசாரணையின்போது, சமூக வலைதளங்களான வாட்சப், இமெயில் போன்றவைகளை பயன்படுத்திக்கொள்ள அனுமதி அளித்து, டில்லி ஐகோர்டு உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.