குழந்தைகளை விஷம் கொடுத்து கொன்ற அபிராமிக்கு ஜாமின் வழங்க நீதிமன்றம் மறுப்பு

சென்னை:

ள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொன்றுவிட்டு காதலுடன் தப்பி செல்ல முயன்றது தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள அபிராமிக்கு ஜாமீன் வழங்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.

2 பிஞ்சு குழந்தைகளுக்கு தாயான குன்றத்தூர் பகுதியை சேர்ந்த அபிராமி,  பிரியாணி கடை ஊழியருடன் ஏற்பட்ட தகாத நட்பால், தனது 4 வயது மகள் கார்னிகா மற்றும் 7 வயது மகன் அஜய் ஆகியோரை விஷம் கொடுத்தும், கழுத்தை நெரித்தும் கொலை செய்தார்.

பின்னர் கள்ளக்காதலனுடன் சேர்ந்த தலைமறைவாக  கேரளாவுக்கு ஓடிப்போக முயற்சிக்கும்போது நாகர்கோவிலில் அபிராமி கைது பட்டார். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட அபிராமி, தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இவரை ஜாமின் எடுக்க அவரது குடும்பத்தினர் யாரும் முயற்சி மேற்கொள்ளாத நிலையில், கடந்த பல மாதங்களாக சிறையிலேயே அடைபட்டு கிடக்கிறார்.

இந்த நிலையில், தற்போது அபிராமி சார்பில் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.  இந்த மனு நீதிபதி ஜி.கே. இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது.

விசாரணையின்போது, அபிராமி மீதான கொலை வழக்கின் குற்றப்பத்திரி கையை காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு,  டிசம்பர் 21 (இன்று) முதல் விசாரணை தொடங்க உள்ளதாக அரசுத்தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.

இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, காஞ்சிபுரம் நீதிமன்ற வழக்கை எதிர் கொள்ளட்டும் என கூறி, அபிராமியின் கீழ் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.