டில்லி,

வெளிநாடுகளில் இருந்து கொண்டுவரப்படும் டிவி, செல்போன்களுக்கான போன்ற எலக்ட்ரானிக் பொருட்களுக்கான சுங்க வரியை இரு மடங்காக மத்திய அரசு உயர்த்தி அறிவித்து உள்ளது.

வெளிநாடுகளுக்கு செல்பவர்கள் அங்கிருந்து  எலக்ட்ரானிக் பொருட்களை வாங்கி வருவது வழக்கம். விலை குறைவாக இருப்பதால் வெளிநாடுகளில் இருந்து டிவி, டேப்டாப், மொபைல் போன்ற போன்றவற்றை எடுத்து வருவார்கள்.

இந்நிலையில், இதற்கான சுங்க கட்டணத்தை 10 சதவிகிதத்திலிருந்து 20 சதவிகிதமாக அதிரடியாக உயர்த்தி மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்தியாவில்  ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் அடிப்படையில் உள்நாட்டு தொழில் வளர்ச்சியை பெருக்க வேண்டும் என்ற நோக்கில், வெளிநாட்டு பொருட்களுக்கு வரியை உயர்த்தி இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த  சுங்கவரி உயர்வு  தனிநபராக இருந்தாலும், நிறுவனமாக இருந்தாலும் சரி இந்த விதிமுறை பொருந்தும் என தெரிவித்துள்ளது.

மத்திய அரசின் இந்த அறிவிப்பினால் செல்போன், டிவி பொருட்களின் விலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.