மதுவினால் ஏற்படும் மரணம்: உலகின் 2வது இடத்தில் இந்தியா

டில்லி:

துவினால் ஏற்படும் மரணங்களில் இந்தியா 2வது இடத்தில் இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து உலக அளவில் ஆல்ஹகால் குடிப்பதால் ஏற்படும் ஆபத்துக்கள் குறித்த ஆய்வில் இந்த தகவல் தெரிய வந்துள்ளது.

உலகளவில் ஏற்படும் மரணங்களில் 10ல் ஒன்று ஆல்கஹால் குடிப்பதால் ஏற்படுவதாக ஆய்வு முடிவு கூறுகிறது. உலக அளவில் மதுகுடிப்பவர்களில் 25 சதவிகிதம் பேர் பெண்கள் என்ற அதிர்ச்சி தகவலும் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் அரசாங்ககே பட்டிதொட்டியெல்லாம் மதுக்கடைகளை திறந்து, சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் குடிகாரர்களாக மாற்றி வருகிறது. இதன் காரணமாக பாதிக்கப்பட்டு, , கல்லீரல் வீங்கி, பார்வை சொருகி, பாதி மனிதனாக அரசு மருத்துவமனைக்கு  வருபவர்களின் எண்ணிக்​கையும் அதிகரித்து இருக்கிறது.

தமிழகத்தில் மதுபான விற்பனையை ஆரம்பித்த தமிழக அரசு,  டாஸ்மாக் ஆரம்பித்தபோது 2,828 கோடியாக இருந்த ஆண்டு வருமானம் தற்போது 18 கோடியாக  அதிகரித்து இருக்கிறது.  இதனைச் சாதனையாகச் சொல்லும் அரசு… குடி காரணமாக மருத்துவமனைகளில் செத்து விழும் மனிதர்கள் எண்ணிக்கை உயரும் போதும் அதையும் சாதனையாகச் சொல்லுமா? ஆபத்தை உணராமல் அரசாங்கம் பரப்பும் வியாதியின் கோரம் என்ன தெரியுமா?

சமீபத்தில் மறைந்த பிரபல நடிகை ஸ்ரீதேவியின் மரணம் ஆல்ஹகால் காரணமாகவே நிகழ்ந்ததாகவும், அதுபோல பன்முக நடிகர் கலாபவன் மணியின் மரணமும் ஆல்ஹகால் காரணமாககே நிகழ்ந்துள்ளது என்பதும் அனைவரும் அறிந்ததே.

இந்த நிலையில் மதுவினால் உயிரிழப்போரின் எண்ணிக்கையில் இந்தியா 2வது இடத்தை வகிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

உலக அளவில் மரணத்துக்கும் ஊனத்துக்கும் மதுவே ஒரு முக்கியக் காரணம்; இது இந்தியாவைப் பொருத்த வரையில் கூட உண்மையாகும். ஒவ்வொரு ஆண்டும் மதுவால் உலக அளவில் 3.2 % மரணங்கள் நிகழ்கின்றன. உலக சுகாதார அமைப்பின் புள்ளிவிவரப்படி இந்தியாவிலும் அருகிலுள்ள தெற்கு ஆசிய நாடுகளிலும், மக்கள் தொகையில் நான்கில் ஒரு பங்கில் இருந்து மூன்றில் ஒரு பங்கு வரை ஆண்கள் மது அருந்துகின்றனர். பெண்களிடமும் பயன்பாடு அதிகரித்து வருகிறது.

மது பயன்பாட்டுக் கோளாறால் ஒருவருக்கு உடல் மற்றும் மன நலத்திற்குத் தீங்கும் சிதைவும் ஏற்படும், பணி செய்வது பாதிப்படையும், உறவுகளில் முரண்பாடும், சமூக மற்றும் சட்டப் பிரச்சினைகளும் உண்டாகிறது.
இந்திய நகரங்களிலும், கிராமங்களிலும் குடிப்பழக்கம் பரவலாக உள்ளது. பொதுவாக, ஆண்களிடம் இப்பழக்கம் பல்வேறு ஆய்வு முடிவுகளின் படி 23%-லிருந்து 74% வரை வேறுபடுகிறது. பெண்களிடம் பரவலாகக் காணப்படாவிட்டாலும், சில பிரிவுகளிலும் சமுதாயங்களிலும் 24% முதல் 48% வரை பரவலாகக் காணப்படுகிறது.

2005-ல் இந்தியாவில் குடிப்போர் எண்ணிக்கை 6.25 கோடி. இவர்களில் 17.4% பேர் (1.06 கோடி) மது பயன்பாட்டுக் கோளாறு உடையவர்கள். இந்தியாவில் மருத்துவ மனைகளில் அனுமதிக்கப் படுகிறவர்களில் 20-30 % பேர் மது தொடர்பான பிரச்சினைகளாலேயே அனுமதிக்கப் படுகின்றனர். தற்போது இந்தியாவில் மதுக்குடிப்போர் எண்ணிக்கை சீனாவுக்கு அடுத்த இடத்தில் உள்ளது. உலக அளவில் 2வது இடத்தில் உள்ளது. மக்கள் தொகையில்தான் இந்தியா 2வது இடத்தில் உள்ளது என்று நினைத்தால், தற்போதைய ஆய்வு முடிவுகளின்படி மதுக்குடிப்பதிலும், அதனால் ஏற்படும் இறப்புகளிலும் இந்தியா 2வது இடத்தில்தான் உள்ளது.

இந்திய அரசின் அறிவிப்பின் படி 2010-ல் சாலை விபத்துக்களில் இறந்தவர்களின் எண்ணிக்கை 1.34.000 பேர் ஆகும். மலைக்கவைக்கும் இந்தப் புள்ளி விவரப்படி தினமும் 336 பேர் மரணம் அடைகின்றனர். மது மற்றும் போதைமருந்து தகவல் மையத்தின் ஆய்வு, 40 % சாலை விபத்துக்கள் குடிபோதை யினாலேயே ஏற்படுகின்றன என்பதை வெளிப்படுத்தியுள்ளது. பெரும்பாலோனோர் இதில் இளைஞர்கள். ஆக்கபூர்வமான 20-50 வயது குழுவில் அடங்கியவர்கள். குடித்துவிட்டு வாகனமோட்டுதல் நாட்டுக்கு ஒரு சாபக்கேடாகி விட்டது.

குடிப்பது காரணாக அதிக ஆபத்தான நடத்தைகள், குடும்ப வன்முறை, அபாயகரமான பாலியல் நடத்தைகள், குற்றமும் வன்முறைச் செயல்களும் ஆகியவற்றிற்கு இடையில் இருக்கும் நெருக்கமான தொடர்பைப் பல்வேறு உலகளாவிய ஆய்வுகள் புலப்படுத்தியுள்ளன.

அதுபோல பெண்கள்  மதுக்குடிப்பதும் அதிகரித்து வருக்றது.கர்ப்பமாக இருக்கும் பெண் குடிப்பதால் குழந்தை குறைகளோடு பிறக்கும் வாய்ப்பு 35-40 % உள்ளது. மேற்கு நாடுகளில் அறிவுத் திறன் குறைபாடுடன் குழந்தைகள் பிறக்கும் உருப்பெற்ற கரு பாதிப்பு நோய் கர்ப்ப காலத்தில் மதுவைப் பயன்படுத்துவதால் ஏற்படுவதாகும்.

இதனால் சிறிய தலை, முகக் குறைபாடுகள், அவயவம் மற்றும் இதயக் கோளாறுகளுடன் குழந்தைகள் பிறக்கின்றன. குழந்தைக்கு நேரக்கூடிய சேதாரத்தைத் தவிர்க்க கர்ப்பிணிகளும் பாலூட்டும் தாய்களும் மது அருந்தக் கூடாது.

மதுவினால்  ஏற்படும் மரணத்தில் சீனா முதல் இடத்திலும், இந்தியா 2வது இடத்திலும் உள்ளது. கடந்த  2016ம் ஆண்டு கணக்கின்படி, ஆல்கஹால் பயன்பாடு காரணமாக உலகம் முழுவதும் 28 லட்சம் பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

 உலகில் மொத்தம் 204 கோடி பேர் ஆல்கஹால் பயன்படுத்துகின்றனர், அதில் 25% பேர் பெண்கள் என்றும் ‘ ஆய்வில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

Leave a Reply

Your email address will not be published.