காட்டு விலங்குகளிலே அதிவேகமாக ஓடவல்லது சிறுத்தை. முன் இரு கால்கள் பின்னோக்கி வர, பின் இரு கால்கள் முன் நோக்கிப் பாய்கிற அதன் மின்னல் வேக பாய்ச்சல் வேகம் சிலாகிப்பை ஏற்படுத்தும்.

காட்டு விலங்குகளில் பலசாலியான புலியை விட சிறுத்தை விவேகம் மிக்கது என்று கூறப்படுவது உண்டு. சீட்டா, லெப்பர்டு, ஜாகுவார் போன்று பல்வேறு வகைகளில் அழைக்கப்படும் சிறுத்தை மரங்களிலும் அனாயசமாக ஏறும் வல்லமை உடையது.

இவ்வளவு பெருமை மிக்க சிறுத்தை ஒன்று, மான் ஒன்றை மடக்கிய நிலையில், அதை உண்ண முயற்சிக்கும்போது, அங்கு திடீரென வந்த கழுதைப்புலி ஒன்று சிறுத்தையை விரட்டி விட்டு, மானை உண்ண முயற்சி செய்கிறது.

அப்போது, மானை வீழ்த்திய சிறுத்தை மீண்டும் மான் அருகே வர, கழுதைப்புலி மீண்டும் சிறுத்தையை விரட்ட, சந்தர்ப்பம் நோக்கி காத்திருந்த மான், துள்ளிக்குதித்து ஓடிய காட்சி பரவசத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி வருகிறது.

சிறுத்தை அதை உண்ண முயற்சிக்கும்போதும், கழுதைப்புலி அதை கடித்து உண்ண முயற்சித்த போதும், இறந்தது போல காணப்பட்ட அந்த புத்திசாலிமிக்க மான், சந்தர்ப்பம் கிடைத்தும் துள்ளிக் குதித்து ஓடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது…

அந்த வீடியோவை நீங்களும் காணுங்களேன்…