ஜனநாயகத்துக்கும் பணநாயகத்துக்கும் நடந்த மோதலில் தேர்தல் ஆணையத்துக்கு தோல்வி: கே.எஸ்.அழகிரி

சென்னை:

நாடு முழுவதும் தேர்தல் நடைபெற்று வரும் வேளையில்,  ஜனநாயகத்திற்கும் பண நாயகத்திற் கும்  ஏற்பட்ட மோதலில் தேர்தல் ஆணையம் தோல்வியுற்றது என தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர்   கே.எஸ். அழகிரி  கூறி உள்ளார்.

தமிழகத்தில் நாளை மறுதினம் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்வு பெறுகிறது. இதற்கிடையில், வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் வகையில் எடுத்துச்செல்லப்பட்ட கோடிக்கணக்கான ரொக்கப் பணம், இலவச பொருட்கள், தங்கம், வெள்ளி நகைகள், மது பாட்டில்கள் தேர்தல் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்த நிலையில், மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ள அனைத்து திட்டங்களை நிறைவேற்றும்,  என்று கூறினார்.

தமிழக முதல்வர்  இந்தியா மோடியின் கையில் பத்திரமாக உள்ளது என்று கூறியிருக்கிறார். ஆனால் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் மோடியின் கையில் பத்திரமாக உள்ளார்.  காவலாளியின் கையில் களவாணி இருக்கிறார்  என்று விமர்சித்தார்.

நீட் தேர்வினால் கோடான கோடி மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், பாரதிய ஜனதா இது சம்பந்தமாக எதுவும் தேர்தல் அறிக்கையில் சொல்லவில்லை ஆனால், நீட் தேர்வு மாநிலங்க ளுக்கு தேவை என்றால் வைத்துக்கொள்வோம் தேவை இல்லை என்றால் எடுத்து விடுவோம் என்று எங்கள் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது என்பதை மீண்டும் நினைவுபடுத்தினார்.

அதுபோல  8 வழி சாலை திட்டம் நாங்கள் வேண்டாம் என்று சொல்லவில்லை என்று கூறியவர்,  வெளி நாடுகளில் இதுபோன்ற திட்டங்களை நிறைவேற்ற கால அவகாசம் எடுத்துக் கொள் கிறார்கள், ஆனால், தமிழகத்தில் அவசர அவசரமாக எடுத்து செயல்படுத்துகிறார்கள் என்று கற்றம் சாட்டினார்.

அதிமுக பாஜக இடையேயான கூட்டணி  கொள்கை அடிப்படையிலான கூட்டணி இல்லை என்று கூறியவர், இந்த கூட்டணி  அவசர அவசரமாக கூட்டப்பட்ட கூட்டமே என்றார்.

தமிழகத்தில் கைப்பற்றப்பட்டுள்ள பணம் மற்றும் பொருட்களை பார்க்கும்போது,  ஜனநாயகத்துக் கும் பணநாயகத்துக்கும் நடந்த மோதலில் தேர்தல் ஆணையத்துக்கு தோல்வி அடைந்துள்ளதையே காட்டுவதாக கூறியவர்,  நடைபெற உள்ள தேர்தலில்  அனைத்து தொகுதிகளின் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெறும்.

இவ்வாறு கூறினார்.