இரட்டை இலை வழக்கை டிச.21க்கு ஒத்தி வைத்தது டில்லி உயர்நீதி மன்றம்

--

சென்னை:

ரட்டை இலையை அதிமுகவுக்கு ஒதுக்கியது எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், விசாரணையை டிசம்பர் 21ந்தேதி டில்லி உயர்நீதி மன்றம் தள்ளி வைத்துள்ளது.

அதிமுகவில் ஏற்பட்ட பிளவு காணமாக இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கியது. பின்னர் ஈபிஎஸ்,ஓபிஎஸ் அணி இணைந்ததை தொடர்ந்து, இரட்டை இலையை அவர்களுக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கியது.

இதை எதிர்த்து டிடிவி தினகரன் சார்பில் டில்லி உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. கடந்த பல மாதங்களாக நடைபெற்ற வரும் இந்த வழக்கு மீண்டும் மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டு வருகிறது.

இந்த வழக்கில் சசிகலா, டி.டி.வி.தினகரன் தரப்பில் வாதங்கள் முடிவடைந்துள்ளன. அவர்களின் தரப்பில் மூத்த வக்கீல்கள் கபில்சிபல், அபிஷேக் மனு சிங்வி, மீனாட்சி அரோரா, ராஜா செந்தூர்பாண்டியன் ஆகியோர் வாதாடினார்கள்.

எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் மூத்த வக்கீல்கள் முகுல் ரோகத்கி, சி.எஸ்.வைத்தியநாதன் தங்கள் வாதங்களை முடித்த நிலையில் மூத்த வக்கீல் விஸ்வநாதன் வாதங்களை தொடர்ந்து வந்தார்.

இந்த நிலையில் வழக்கு மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.