தீபாவளி: திருப்பதியில் ஒரே நாளில் ரூ.3.13 கோடி காணிக்கையை கொட்டிய பக்தர்கள்

திருமலை:

டந்த 4 நாட்களாக தீபாவளி விடுமுறை என்பதால், நேற்று திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அலை மோதியது. இதன் காரணமாக நேற்று ஒரு நாளில் மட்டும் ரூ.3.13 கோடி காணிக்கையை ஏழுமலையானுக்கு பக்தர்கள் செலுத்தி உள்ளனர்.

நேற்று தீபாவளி பண்டிகையையொட்டி திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அலை மோதியது.  இலவச தரிசனத்துக்கு 12 மணி நேரம் முதல் 14 மணி நேரம் வரை ஆனதாக பக்தர்கள் தெரிவித்த னர்.

அதுபோல நடைபாதை வழியாக நடந்து வரும் பக்தர்களும்கூட சுமார் 12 மணி நேரம் காத்திருந்தே ஏழுமலையானை தரிசித்ததாக கூறப்படுகிறது. ரூ.300 டிக்கெட் எடுத்த பக்தர்கள் 5 மணி நேரமும் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

இந்த நிலையில் நேற்று மட்டும் திருப்பதி ஏழுமலையான  70,713 பக்தர்கள் சாமி தரிசனம் செய்திருப்பதாகவும், இதன் காரணமாக ஏழுமலையானுக்கு ரூ.3.13 கோடி காணிக்கையாக கிடைத்துள்ளது என்றும் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published.