இலங்கை நாடாளுமன்றம் திடீர் கலைப்பு: நள்ளிரவில் சிறிசேனா நடவடிக்கை

கொழும்பு:

லங்கையில் நடைபெற்று வரும் உள்நாட்டு குழப்பம் காரணமாக இலங்கை நாடாளு மன்றம்  வரும்14ந்தேதி கூடுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று இரவு திடீரென நாடாளு மன்றத்தை கலைத்து அதிபர் சிறிசேனா உத்தரவிட்டார்.

இலங்கை முன்னாள் பிரதமர்  ரணிலுக்கும் அதிபர் சிறிசேனாவுக்கும் இடையே ஏற்பட்ட அதிகார மோதல் காரணமாக பிரதமர் ரணிலை பதவியில் இருந்து நீக்கிவிட்டு, முன்னாள் அதிபர் ராஜபக்சேவை பிரதமராக அதிபர் சிறிசேனா நியமனம் செய்தார். இதன் காரணமாக அங்கு உச்சக்கட்ட குழப்பம் நிலவி வந்தது.

இதற்கிடையில் பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட ரணில் நானே பிரதமர் என்று கூறினார். அவருக்கு ஆதரவாக சபாநாயகரும் கருத்து தெரிவித்தார். இதையடுத்து நாடாளுமன்றத்தை அதிபரி சிறிசேனா முடக்கினர்.

இதற்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில்,  வரும் 14ந்தேதி இலங்கை நாடாளுமன்றம் கூடுவதாக அதிபர் சிறிசேனா அறிவித்து இருந்தார்.

இலங்கை அதிபர் சிறிசேனா

இந்த நிலையில், நேற்று இரவு   பாராளுமன்றத்தை கலைத்து அதிபர் சிறிசேனா உத்தர விட்டுள்ளார். இதனால் இலங்கை அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இலங்கை நாடாளுமன்றத்தில் மொத்தம் 225 எம்பிகள் உள்ள நிலையில் பெரும்பான்மையை நிரூபிக்க குறைந்த பட்சம் 113 எம்பிகளின் ஆதரவு தேவை. ஏற்கனவே ரணில் விக்ரமசிங்கேவுக்கு ஆட்சியமைக்க ஆரவளித்த தமிழ் தேசிய கூட்டமைப்பு இப்போதும் ரணிலுக்கான தங்களின் ஆதரவு தொடர்வதாக அறிவித்துள்ளது.

ரணில் விக்ரமசிங்கேவுக்கு ஆதரவாக ஐக்கிய தேசிய கட்சியின் 99 எம்பிக்களும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் 14 எம்பிக்களும் வாக்களிக்க உள்ளனர். இதன் காரணமாக தற்போது ரணிலுக்கே பெரும்பான்மை உள்ளது.

அதேவேளையில், தற்போதைய பிரதமர் ராஜபக்சேவுக்கு ஸ்ரீலங்காமக்கள் சுதந்திர கட்சியின் எம்பிகள் உள்ளிட்ட 105 எம்பிகள் வாக்களிக்க உள்ளனர்.  அவர் வெற்றி பெற மேலும் 9 எம்.பி.க்கள் ஆதரவு தேவை.  இதன் காரணமாக அங்கு குதிரை பேரம் நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், பாராளுமன்றத்தில் ராஜபக்சே பெரும்பான்மை நிரூபிக்க முடியாது என்ற நிலையில், அதிபர் சிறிசேனா பாராளுமன்றத்தை கலைத்து உத்தரவிட்டுள்ளார்.