விவாகரத்து மனு: குடும்பநல கோர்ட்டில் அமலா பால்  இன்று தாக்கல்!

 

சென்னை:

விவாகரத்து கோரி நடிகை அமலாபால் குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

amla

நடகை அமலாபால் கணவர் விஜய்யிடமிருந்து விவாகரத்து கோரி முறைப்படி குடும்ப நல கோர்ட்டில் மனு இன்று தாக்கல் செய்தார்.

நடிகை அமலா பாலுக்கும் இயக்குநர் விஜய்க்கும் இரு ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது.

இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் சில மாதங்களாகப் பிரிந்து வாழ்கின்றனர்.

தனக்கும் அமலா பாலுக்குமான தாம்பத்தியத்தில் நேர்மையும் நம்பிக்கையும் இல்லாததே இந்த பிரிவுக்குக் காரணம் என விஜய் அறிவித்துவிட்டார். இதைத் தொடர்ந்து விவாகரத்துக்கான நடவடிக்கைகளை இருவரும் மேற்கொண்டனர்.

amala2

இன்று முறைப்படி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் அமலா பால் விவாகரத்து மனுவை தாக்கல் செய்தார்.

தனது வக்கீல் சாய் ஜோஸ் மூலம் அவர் மனுத் தாக்கல் செய்துள்ளார். விஜய் – அமலா இருவரும் பரஸ்பர விருப்பத்தின் பேரில் விவாகரத்து மனு தாக்கல் செய்கின்றனர்

Leave a Reply

Your email address will not be published.