பாராளுமன்ற தேர்தலில் தேமுதிக தனித்து போட்டி: விஜயகாந்த்

சென்னை:

டுத்த ஆண்டு நடைபெற உள்ள  பாராளுமன்ற தேர்தலில் தேமுதிக தனித்து அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடும் என்று தேமுதிக கட்சி தலைவர் விஜயகாந்த் தெரிவித்து உள்ளார்.

இன்று கோயம்பேட்டில் உள்ள தேமுதிக கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிர்வாகிகள் கூட்டத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்துக்கு பிறகு இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே திமுக, அதிமுக போன்ற கட்சிகள் நாடாளுமன்ற தேர்தலை குறிவைத்து அரசியல் நகர்வுகளை முன்னெடுத்தும் வரும் நிலையில், தேமுதிகவும் இன்று ஆலோசனை நடத்தியது.

அதைத்தொடர்ந்து,   நாடாளுமன்றத் தேர்தலில் தே.மு.தி.க தனித்து போட்டியிடும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் விஜயகாந்த் அறிவித்துள்ளார். அனைத்து தொகுதிகளிலும் தே.மு.தி.க போட்டியிட்டு, வெற்றி பெற்று மக்கள் பணி ஆற்ற வேண்டும் எனவும் விஜயகாந்த் கூறியுள்ளார்.