ஓபிஎஸ் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு சிபிஐக்கு மாற்றம்? சென்னை உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி

--

சென்னை:

துணைமுதல்வர் ஓபிஎஸ் மீதான சொத்துக்குவிப்பு வழக்கை சிபிஐக்கு மாற்றலாம் என்று சென்னை உயர்நீதி மன்றம் கருத்து தெரிவித்து உள்ளது.  இதுபரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக ஓபிஎஸ் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது  திமுக தமிழக லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் கொடுத்தும், அதுகுறித்து எந்தவித விசாரணையும் நடைபெறாத நிலையில், உயர்நீதி மன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

சேகர் ரெட்டியுடன் ஓபிஎஸ்

வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த புகாரின்பேரில் இதுவரை லஞ்சஒழிப்பு துறை ஏன் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், 3 மாதமாக கிடப்பில் போடப்பட்து  ஏன் என் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு கேள்வி எழுப்பியும், கண்டனமும்  தெரிவித்தார்.

மேலும், மணல்மாபியா சேகர் ரெட்டி வீட்டில் நடைபெற்ற சோதனையின்போது கைப்பற்றப்பட்ட டைரியில், துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் பெயரும் இடம்பெற்றிருப்பதால், சொத்து குவிப்பு வழக்கையும் ஏன் சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிடக்கூடாது என்று கூறிய நீதி மன்றம், வழக்கின் விசாரணையை வரும் திங்கட்கிழமை ஒத்தி வைத்தது.

இந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி ஜெயச்சந்திரன்  முன்னிலையில் இன்று விசாரணை நடைபெற்றது.

நீதிபதி இன்றைய விசாரணையின்போது எழுப்பிய சரமாரியான கேள்வி காரணமாக, ஓபிஎஸ் குடும்பத்தினர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட வாய்ப்பு இருப்பதாக உயர்நீதி மன்ற வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன் காரணமாக ஓபிஎஸ் மற்றும் அவரது குடும்பத்தினர் பீதியடைந்து உள்ளதாக கூறப்படு கிறது.