தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் காயமடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூறிய  ஸ்டாலின்

சென்னை:

முதல்வரை சந்திக்க அனுமதி மறுக்கப்பட்ட ஸ்டாலின் முதல்வர் அறைமுன்பு அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினார். இதையடுத்து அங்கிருந்து காவலர்களால் அகற்றப்பட்ட ஸ்டாலின், தலைமை செயலகம் எதிரே உள்ள சாலையில் அமர்ந்து மறியல் செய்தார்.

அதைத்தொடர்ந்து, ஸ்டாலின் மற்றும் திமுக, காங்கிரஸ் எம்எல்ஏக்களை கைது செய்த போலீசார் வாகனத்தில் ஏற்றி அழைத்துச் சென்றனர். அபபோது, அந்த  காவல் வாகனத்தை திமுகவினர் சிறைப்பிடித்தனர். இதன் காரணமாக திமுக தொண்டர்களுக்கும் போலீசாருடன் கைகலப்பு ஏற்பட்டது.

அப்போது போலீஸ் வாகனத்தில் இருந்து செய்தியார்களிடம் பேசிய ஸ்டாலின்,  முதலமைச்சர் பழனிசாமி பதவி விலகும் வரை போராட்டம் தொடரும் என்றுகூறினார்.

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் காயமடைந்தவர்களை சந்தித்த ஸ்டாலின்

தூத்துக்கு துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக உறுப்பினர்கள் சட்டமன்ற அலுவல் கூட்டத்தை புறக்கணித்துள்ளதாக கூறிய ஸ்டாலின், எடப்பாடி  அரசு செயலற்று இருக்கிறது  என்று குற்றம் சாட்டினார்.

தோட்டாக்களால் துளைக்கப்பட்ட தூத்துக்குடி மக்களை மருத்துவமனையில் பார்த்தபோது, இதயத்தை துளைத்தெடுத்த வேதனையிலிருந்து இன்னும் மீள முடியவில்லை. இறந்தவர்களும் படுகாயமடைந்தவர்களும் கொடூரமான தாக்குதலை எதிர்கொண்டிருப்பது அப்பட்டமாக தெரிகிறது.

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் காயமடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூறிய  ஸ்டாலின்

கூட்டத்தைக் கலைக்கிறோம் என்ற பெயரில் குறி வைத்து சுட்டுத்தள்ளியிருக்கிறது காவல்துறை. தன் சொந்த மாநிலத்து மக்களையே நர வேட்டை ஆடியுள்ளது  ஆளத்தகுதியற்ற எடப்பாடி அரசு.  நீதியும் நியாயமும் கிடைக்க-குற்றமிழைத்தோர் தண்டிக்கப்பட நாம் உறுதியாக போராடுவோம். முதலமைச்சர் பழனிசாமி பதவி விலகும் வரை போராட்டம் தொடரும்.

இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில்  காயமடைந்தவர்களை சந்தித்த ஸ்டாலின்