அதிமுக உண்ணாவிரத போராட்டத்தை நீர்த்துப்போக செய்ய செய்யவே திமுக போராட்டம்: தம்பித்துரை

சென்னை:

திமுக உண்ணாவிரத போராட்டத்தை நீர்த்துபோக செய்ய செய்யவே திமுக கூட்டணி கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்று அதிமுக எம்.பி. தம்பித்துரை கூறினார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தமிழகத்தில் அரசியல் கட்சியினர், விவசாயிகள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

இந்நிலையில், இன்று காலை பாராளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுக எம்.பி.க்கள், பாராளுமன்றத்தினுள்  சபை நடுவே வந்து அமளியில் ஈடுபட்டனர். அதிமுக எம்.பி.க்களின் அமளி காரணமாக பாராளுமன்ற இரு அவைகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.

அதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மக்களவை துணைசபாநாயகரும், அதிமுக எம்.பி.யுமான தம்பித்துரை,

மத்திய அரசுக்கு எதிராக இன்று அதிமுக சார்பில் அமைச்சர்கள் தலைமையில  இன்று உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது என்றும், சென்னையில்,  முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் தலைமையில் தமிழகம் முழுவதும் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது என்று கூறினார்.

காவிரியில் தமிழகத்தின் உரிமைக்காக உண்மையாகவும் உணர்வுப்பூர்வமாகவும் போராடுவது அதிமுக மட்டும்தான் என்றும்,  எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் காவிரி உரிமைக்காக போராடினர். அவர்களின் வழியில் தற்போதைய அதிமுகவும் போராடி வருகிறது என்றார்.

மேலும், காவிரியில் தமிழகத்தின் உரிமையை மீட்டெடுப்பதற்காக திமுக போராட்டம் நடத்தவில்லை என்று குற்றம் சாட்டியவர்,  திமுகவினர் இந்த விவகாரத்தை வைத்து அரசியல் செய்கின்றனர் என்றும்,  காவிரி விவகாரம் முடிவுக்கு வரக்கூடாது என்பதே திமுகவின் நோக்கம் என்றும் கூறினார்.

இன்று காவிரி பிரச்சினையில் மத்திய அரசை எதிர்த்து, முதல்வர் மற்றும் துணை முதல்வர் தலைமையில் நடைபெற்று வரும்  உண்ணாவிரத  போராட்டத்தை நீர்த்துப்போக செய்து,  கவனத்தை தங்கள் பக்கம் திருப்பு வதற்காகவே  சாலை மறியல்  போன்ற போராட்டங்களை திமுகவினர் நடத்துகின்றனர் என்றும்  தம்பிதுரை குற்றம் சாட்டினார்.

You may have missed